உப்பு கருவாடு, இஞ்சி டீ லாக்டவுன் சமையலில் பிஸியானார் ஜாங்கிரி மதுமிதா!

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட ஜெயஸ்ரீ மரணமும் என்னையும் மிகவும் பாதித்தது

By: Updated: July 1, 2020, 05:11:49 PM

bigg boss madhumitha lifestyle : தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகை என பெயர் வாங்கியவர்கள் குறிப்பிட்ட சிலர் மட்டுமே. ஆச்சி மனோரமா, கோவை சரளா போன்றோர் நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை அமைத்துக் கொண்டனர். அவர்களுக்கு பிறகு எத்தனையோ நடிகைகள், கோலிவுட்டில் காமெடி ரோலில் காலடி எடுத்து வைத்தனர். அதில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதை கவர்ந்தனர்.

அந்த வகையில், ஜாங்கிரி மதுமிதா பற்றி அறிமுகமே வேண்டாம். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானத்திற்கு அடுத்தப்படியாக ரசிகர்கள் கைத்தட்டி ரசித்தது நம்ம ஜாங்கிரி மதுமிதாவை தான். அடுத்தடுத்து ‘சுமார் மூஞ்சி குமாரு’, ‘டிமாண்டி காலனி’ என திரைக்கதையுடன் ஒன்றிய காமெடி கதாபாத்திரங்களில் கலக்கினார் மது. முக­பா­வ­னை­க­ளும், உடல்­மொ­ழி­யும், வசன வெளிப்­பா­டும் காமெ­டிக்கு எந்த  அள­வுக்கு முக்­கி­யம் என்­பதை நன்­றாக உணர்ந்து நடிக்­கக்­கூ­டிய திற­மை­சாலியான நடிகை.

லாக்டவுனில் தனது நேரத்தை மது எப்படி செலவிடுகிறார்? என அறிய தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். வழக்கம் போல் தனது தெளிவான தமிழ் பேச்சுடன் உரையாடலை தொடர்ந்தார்.

எப்படி இருங்கீங்க?

”நல்லா இருக்கேன். கொரோனா நம்ம கிட்ட வராத வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழக அரசு மக்களின் நலனுக்காக எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். ’வீட்டில் இருங்கள் விலகி இருங்கள்’. இதை ஃபலோ செய்தாலே போதும் கொரோனாவை விரட்டி விடலாம்”.

இந்த நேரத்தில் உங்களின் ஆரோக்கியமான உணவு பழக்கம் என்ன?

”நம் வீட்டில் சமைத்து உண்ணும் உணவுகளே உடலுக்கு ஆரோக்கியம் தான். கூடுதலாக எதிர்ப்புசக்தி தரும் உணவுகளை தவறாமல் சேர்த்துக் கொள்வது நல்லது. எனக்கு இந்த டயட் மேல் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. அளவான உணவு பழக்கத்தையே கடைப்பிடிப்பேன். வீட்டு வேலைகளை செய்தாலே போதும் நம்ம உடம்பு நம்ம சொல்லுறத அப்படியே கேட்கும். இதை தவிர தினமும் இஞ்சி டீ குடிக்கிறேன்”.

கொரோனா காலத்தில் உங்களின் பொழுதுபோக்கு?

சமைப்பது தான். தினமும் 3 வேளையும் வீட்டில் என்னோடைய சமையல் தான். கணவர்,அம்மாவுடன் நேரத்தை செலவழிக்கிறேன். கிடைத்த நேரத்தை சந்தோஷமா ஃபேமலி கூட டைம் ஸ்பெண்ட் பண்ண வேண்டியது தான். கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ட்விட்டரில் அக்கவுண்ட் ஓபன் பண்ண. அதுல கொஞ்சம் நேரம் செலவிடுவேன். முக்கியமா தினமும் மறக்காம நியூஸ் பார்த்துருவேன். எல்லா நியூஸ்லையும் அப்டேட்டா இருக்கேன்.

சாத்தான்குளம் பற்றி?

கண்டிப்பா மன்னிக்க முடியாத அநீதி. ஜெயராஜ்- பென்னிக்ஸ் அனுபவித்த சித்தரவதைகள் பற்றி கேட்க கேட்க கண் கலங்கிடிச்சி. கண்டிப்பாக அவர்கள் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். இதுப்போன்ற சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை நிகழ கூடாது. தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. விழுப்புரத்தில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட ஜெயஸ்ரீ மரணமும் என்னையும் மிகவும் பாதித்தது. இதுப்போன்ற குற்றங்களில் ஈடுப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும். அப்போது தான் சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை கூடும்.

வனிதா மறுமணம்?

உங்கள மாறி நானும் வீடியோவில் தான் பார்த்தேன்.

நீங்கள் சமைப்பதில் கணவருக்கு பிடித்தமான உணவு?

எல்லாமே பிடிக்கும் முக்கியமா உப்பு கருவாடு. என்னுடைய மிகப் பெரிய பலமே அவர் தான். பிக் பாஸ் சர்ச்சையில் தொடங்கி அனைத்திலும் என்னை மோடிவ் செய்து நிறைய பாசிடிவ் விஷயங்களை என் கண் முன் நிறுத்துவார்.

பிரபலங்களின் யூடியூப் சேனல் பற்றி?

இந்த லாக்டவுனில் எல்லாரும் யூடியூப் சேனல் ஆரம்பிச்சிடாங்க. நானும் பார்த்தேன். என் கணவர் ஏற்கனவே வைத்திருக்கும் யூடியூப் சேனலை புதுபிக்கலாம்னு சில ஐடியாக்களை வைத்திருந்தோம். ஆனால் இந்த நேரத்தில் அதை செய்தால் பத்தோடு பதினொன்ன போய்டும்னு வெயிட் பண்றோம். நல்ல விஷயத்தை எப்ப பண்ணாலும் மக்கள் ஆதரிப்பார்கள். கூடிய சீக்கிரத்தில் அந்த யூடியூப் சேனலில் என்னை பார்ப்பீர்கள்.

தியானம் பற்றி?

நான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே பார்த்து இருப்பீங்க தினமும் மறக்காம ’ஓ நமச்சிவாய’ சொல்லிக்கொண்டே இருப்பேன். வீட்டிலும் அப்படி தான் சாமி கும்மிடுவது, ஸ்லோகம் சொல்வது என அன்றாட பணியை போல் அதையும் ஒருபக்கம் தவறாமல் செய்வேன்.

சமீபத்தில் படித்த புத்தகம்?

இந்த லாக்டவுனில் பொன்னியின் செல்வன் படித்து முடித்து விட்டேன். அற்புதமான படைப்பு. பிரமிக்க வைத்தது. அடுத்து ராமாயணம் படிக்க பிளான் செய்து இருக்கிறேன்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss madhumitha lifestyle jangri madhumitha husband bigg boss madhu lockdown times

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X