விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு சீசனுமே எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெற தவறுதில்லை. குறிப்பாக வார நாட்களில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதே பார்க்கவே தமிழகத்தில் ஒரு பெருங்கூட்டமே உள்ளது.
அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 6, கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 21 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஆரம்பத்திலேயே ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது ஷிவின் கணேசன். இவர் ஒரு திருநங்கை.
ஷிவின், விக்ரமன், அசீம் மூன்று பேரும் பைனல் வரை சென்றனர். இறுதியில் அசீம் அதிக வாக்குகள் பெற்று, பிக்பாஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். ஆனால் மக்கள் ஷிவினுக்கும் ஏகபோக ஆதரவை வழங்கினர்.
மாடல் மற்றும் ஐடி ஊழியரான ஷிவின், மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இந்தியா 2021 பட்டத்தை வென்றவர். ஸ்பெயினில் நடைபெற்ற மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் 2022 போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்களின் மனங்களை வென்றிருக்கிறார்.
ஷிவின் கணேசன் கியூட் கிளிக்ஸ் இங்கே…

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“