‘சாணி ராணி ஒழிக’ … பிக் பாஸ் 2 ஐஸ்வர்யாவுக்கு எதிராக நெட்டிசன்கள் கூச்சல்

Bigg Boss Tamil 2 : பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக சர்வாதிகார ஆட்சி என்ற டாஸ்க் நடைபெற்றது. அதன் மீம்ஸ் வைரலாகி வருகிறது

Bigg Boss Tamil 2
Bigg Boss Tamil 2

Bigg Boss Tamil 2 : பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக சர்வாதிகார ஆட்சி என்ற டாஸ்க் நடைபெற்றது. இதில் இந்த வார வீட்டின் தலைவி ஐஸ்வர்யா ராணியாக இருந்தார். இவருக்கு ஆலோசகராக ஜனனி மற்றும் பாதுகாவலராக டேனியல் இருந்தனர்.

Bigg Boss Tamil 2 : பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் சர்வாதிகார ஆட்சி:

பிக் பாஸ் தமிழ் 2 டாஸ்கில், கடந்த 2 நாட்களாக நடந்து வந்த ராணி ராஜ்ஜியத்தில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். உணவை பிடிங்கி வைத்துக்கொண்டு ராணி போட்டியாளர்களை பாடு படுத்தினார். மேலும் அவர்களின் ஆடைகளை நீச்சல் குளத்தில் வீசியும், பாலாஜி மற்றும் பிற போட்டியாளர்கள் மீது குப்பை கொட்டியும் அகம்பாவத்தை வெளிப்படுத்தினார்.

பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் நுழையும் ஆர்யா பற்றிய செய்திக்கு:

போட்டியின் இறுதியில், பொன்னம்பலத்தால் ராணி தோற்கடிக்கப்படுகிறார். ராணியின் சிலையில் உள்ள தலை துண்டிக்கப்பட்டு, மக்கள் புரட்சி வென்று சர்வாதிகார ஆட்சி வீழ்த்தப்படுகிறது. இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஐஸ்வர்யா, கன்ஃபெஷன் ரூம் சென்று கதறி அழுகிறார். ஒரு கட்டத்தில் அவரை சாந்தப்படுத்த பிக் பாஸ் போராடுகிறார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்களால் வருத்தெடுத்துள்ளார். அந்த தொகுப்பு உங்களுக்காக:

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 2 aishwayra dutta

Next Story
நண்டு சமையலில் இதை சேர்க்க மறந்து விடாதீர்கள்!நண்டு ரசம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com