”ஓவியாவை போல் இருப்போம்: காயத்ரியை மன்னிப்போம்”: நடிகர் சிம்பு

நாள்தோறும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு தமிழகம் எங்கும் ரசிகர்கள் இருக்கையில், அதற்கு நடிகர் சிம்பு விதிவிலக்கல்ல.

By: August 2, 2017, 5:15:58 PM

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’பிக் பாஸ்’ தமிழ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

குறும்புத் தனம், புரம் பேசாமல் இருத்தல், இயல்பாக இருத்தல், மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு தெரிதல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக, அந்நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளரான நடிகை ஓவியாவிற்கு தொடர்ந்து ஆதரவு குரல் ஒலித்து வருகின்றனர். ‘ஓவியா ஆர்மி’ என ஓவியாவுக்கு தனி போர்ப்படையே தயாராக உள்ளது. ஓவியா கேம். ஓவியா கீதம் என எங்கும் ஓவியா மயம். ஓவியாவுக்கு தமிழகம் எங்கும் ரசிகர்கள் இருக்கையில், அதற்கு நடிகர் சிம்பு விதிவிலக்கல்ல.

ட்விட்டரில் செவ்வாய் கிழமை நடிகர் சிம்பு மற்றும் நடன இயக்குநர் சதீஷ் ஆகியோர் ஓவியாவை பற்றியே பதிவிட்டிருந்தனர்.

“காயத்ரி தன் மனதில் இருப்பதை எல்லாவற்றையும் சக்தியிடம் சொல்லாமல் ஓவியாவிடமே சொல்லிவிடலாம். காயத்ரி நாடகம் ஆடுகிறார்”, என பதிவிட்டிருந்தார்.

அதற்கு, சிம்பு, “நாம் மற்ரவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வோம். காயத்ரி உள்ளிட்ட அனைவரும் கெட்டவர் அல்ல. சூழ்நிலைதான் மற்றவர்கள் நல்லவர்களா என்பதை தீர்மானிக்கிறது”, என பதிலளித்திருந்தார்.

இதன்பின், சதீஷ் காயத்ரி செய்ததையே பேசிக்கொண்டிருக்க, “உண்மைதான். அவர் வெளியில் வந்தவுடன் தான் செய்தது தவறுதான் என்பதை உணருவார். அவர்களை துன்புறுத்தாமல், அவர்கள் அனைத்தையும் புரிந்துகொள்ள ஏதுவாக இருப்போம். மற்றவர்களை காயப்படுத்தாததால்தானே நாம் ஓவியாவை விரும்புகிறோம். அன்பை விதைப்போம்”, என பதிவிட்டிருந்தார்.

மேலும், “நான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஓவியா எப்படி இருக்கிறாரோ அப்படியே எனக்கு பிடித்திருக்கிறது”, என பதிவிட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss tamil simbu reveals hes an oviya fan asks viewers to forgive gayathri

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X