பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு திருநங்கை.. யார் இந்த ஷிவின் கணேசன்?
ஷிவின், மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இந்தியா 2021 பட்டத்தை வென்றவர். ஸ்பெயினில் நடைபெற்ற மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் 2022 போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்.
Biggboss Tamil 6 | விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு சீசனுமே எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெற தவறுதில்லை. குறிப்பாக வார நாட்களில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதே பார்க்கவே தமிழகத்தில் ஒரு பெருங்கூட்டமே உள்ளது. அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்மறை விமர்சனங்களும் இல்லாமல் இல்லை.
Advertisment
இவ்வளவு நெகட்டிவிட்டிக்கு மத்தியிலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி இப்போது தமிழக மக்களின் பெரிய எதிர்பார்ப்பாக மாறிவிட்டது. ஒவ்வொரு சீசன் ஆரம்பிக்கும் போதும், இம்முறை போட்டிக்கு யாரெல்லாம் வருவார்கள் என்பதில் ஆரம்பித்து, தங்களுக்கு பிடித்தவர்களுக்காக சோஷியல் மீடியாவில் ஆர்மிக்கள் ஆரம்பித்து, அவர்கள் வெற்றி வாகை சூடுவதை பார்க்குவரை’ ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்கு பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர்.
முக்கியமாக பிக்பாஸ் நிகழ்ச்சி, அதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல், பல பல யூடியூபர்களுக்கும், மீம் கிரியேட்டர்களுக்கும் இலவசமாக கன்டென்ட் கொடுத்து அவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தி வருகிறது.
அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 6, அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 20 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஆரம்பத்திலேயே ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது ஷிவின் கணேசன். இவர் ஒரு திருநங்கை.
Advertisment
Advertisements
பிக்பாஸ் 5வது சீசனில் முதல் முறையாக திருநங்கை நமீதா மாரிமுத்து பங்கேற்றிருந்தார். அவர் சில நாட்கள் மட்டுமே வீட்டில் இருந்தாலும், ரசிகர்களிடமிருந்து ஏகபோக அன்பை பெற்றார். அந்தவகையில் இந்த சீசனில் ஒரு போட்டியாளராக திருநங்கை ஷிவின் கணேசன் கலந்து கொண்டுள்ளார்.
ஷிவின், மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இந்தியா 2021 பட்டத்தை வென்றவர். ஸ்பெயினில் நடைபெற்ற மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் 2022 போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்.
மாடல், நடிகை மற்றும் ஐடி ஊழியரான ஷிவின், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வியறிவுத் திறன்களை மேம்படுத்த உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் வாலண்டியராக பணியாற்றுகிறார்.
ஷிவின் குடும்பத்துக்கு ஒரே பையன். அவர் திருநங்கையாக மாறியது வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனால் இவர் வேலை தேடி சிங்கப்பூர் சென்றார். அங்கு மாடலாக மாறிய ஷிவின் கணேசன், சில ஆண்டுகள் அங்கேயே இருந்தார். பிறகு மீண்டும் இந்தியா வந்தார். அப்போதும் கூட அவரது குடும்பம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னுடைய அம்மாவை கூட ஷிவின் சந்திக்கவில்லை. என்றாவது ஒரு நாள் அம்மா, தன்னை புரிந்து கொள்வாள் என்று நம்புகிறார் இந்த புதுமைப்பெண் ஷிவின் கணேசன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“