சுரைக்காய் ரோல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சுரைக்காய் துருவல்- ஒன்றரை கப்
இஞ்சி- 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – அரை கப்
சோம்பு – 1 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
கார்ன்ஃப்ளர் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
பூண்டு – 3 பல்
பச்சை மிளகாய் – 5
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் சுரைக்காயை தோல் நீக்கி துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். கடலைப் பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின்னர் கடலைப் பருப்பின் தண்ணீரை வடித்து வைக்கவும். அடுப்பில் கடாய் வைத்து சுரைக்காய் துருவல், இஞ்சித் துருவல் மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். இந்த கலவை ஆறிய பிறகு சிறிது நேரம் கழித்து இதனுடன் பூண்டுப் பல், பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் விடாமல் வடைக்கு அரைப்பது போல் அரைத்து எடுக்கவும்.
அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி உப்பு, சோம்பு, கொத்தமல்லித் தழை, மஞ்சள் தூள், சோள மாவு, கரம் மசாலா தூள் சேர்த்து பிசைய வேண்டும். இப்போது மாவை எலுமிச்சை அளவிற்கு உருண்டைகளாகப் பிடித்து பின்னர் அதை நீளவாக்கில் விரல்களைப் போல் தேய்க்கவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நீளவாக்கில் உருட்டியவற்றைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்தால் சுவையான சுரைக்காய் ரோல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“