ஒரு முறையில் பிரெட்டில், இப்படி பட்டூரா செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
மைதா மாவு – 3 கப்
பிரட்- 8 ஸ்லைஸ்
கெட்டித் தயிர்- அரை கப்
பேக்கிங் பவுடர்- அரை ஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறை : மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூன்று முறை சலிக்கவும். பிரட்டின் ஓரத்தை எடுத்துவிட்டு ஒவ்வொன்றாகத் தண்ணீரில் தோய்த்து உடனே பிழந்து எடுத்து கையால் நன்றாக மசிக்கவும். இதனுடன் சலித்த மாவு, தயிர் சேர்த்துப் பிசையவும். இதை 2 மணி நேரம் ஊற வைத்து பெரிய உருண்டையாக செய்து, மைதா மாவில் புரட்டி, சற்று பெரிய பூரி போல் இடவும். எண்ணெய்யில் பொரிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“