பெண்களுக்கு மட்டும்தான் மார்பக புற்றுநோய் ஏற்படுமா? தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

உலகளவில் சமீப காலமாக பெண்களை அச்சுறுத்தி வரும் நோய் மார்பக புற்றுநோய். உலகளவில் எட்டில் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.

உலகளவில் சமீப காலமாக பெண்களை அச்சுறுத்தி வரும் நோய் மார்பக புற்றுநோய். உலகளவில் எட்டில் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
breast cancer, health, breast cancer symptoms

உலகளவில் சமீப காலமாக பெண்களை அச்சுறுத்தி வரும் நோய் மார்பக புற்றுநோய். உலகளவில் எட்டில் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான தெளிவான காரணத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்கள் குடும்பத்தில் யாருக்கும் மார்பக புற்றுநோய் இல்லை என்றாலும், அந்நோய் உங்களுக்கும் ஏற்படாது என சொல்லிவிட முடியாது. மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் அந்நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள நீங்கள் சில முக்கிய விஷயங்களை தெரிந்துகொள்ளுதல் அவசியம்.

Advertisment

1. முறையாக செயல்படாத ஜீன்களின் காரணமாக, நமது உடலில் உள்ள செல்கள் புற்றுசெல்லாக மாறுவதே மார்பக புற்றுநோய். உங்கள் மார்பகத்தில் சந்தேகப்படக்கூடிய திடமான கட்டி இருந்தால், மருத்துவரை உடனடியாக அனுகுங்கள்.

2. உங்கள் மார்பகத்தில் கட்டி தோன்றுவது மட்டும் மார்பக புற்றுநோய்க்கு அறிகுறி அல்ல. மார்பகத்தில் அரிப்பு, வீக்கம், மார்பகத்திலிருந்து திரவம் வெளியேறுதல் உள்ளிட்டவையும் அறிகுறிகளாகும். உங்கள் மார்பகங்களில் மாற்றம் ஏதாவது தென்பட்டால் அது புற்றுநோய் அறிகுறியாகவும் இருக்கலாம்.

3. அதிகப்படியான மது பழக்கமும் மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவு பழக்கம், முறையான உடற்பயிற்சியை கடைபிடியுங்கள்.

Advertisment
Advertisements

4. உடற்பயிற்சி, சைக்கிளிங், ஓட்டபயிற்சி, ஆகியவையும் மார்பக புற்றுநோயிலிருந்து தற்காத்துக்கொள்ள வழிவகுக்கும். நடைபயிற்சியும் நல்லதே.

5. பெண்களுக்கு மட்டும்தான் மார்பக புற்றுநோய் ஏற்படும் என நினைப்பது தவறு. ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படும். ஆனால், பெண்களுக்கே பெருமளவில் ஏற்படுகிறது. குடும்பத்தில் யாருக்காவது மார்பக புற்றுநோய் இருந்தால், அக்குடும்பத்திலுள்ள ஆணுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

இதையும் படியுங்கள்: ”பெண்களே! மார்பக புற்றுநோய் என்றால் மார்பகங்களை அகற்ற வேண்டாம்”: மாற்று சிகிச்சையில் நலம் பெற்ற நம்பிக்கை பெண்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: