தாய்ப்பால் கொடுப்பதால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பல நன்மைகள் உள்ளது என்பது அறியப்பட்ட உண்மை. இது இருவருக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்க உதவுகிறது, அதே நேரத்தில் புதிதாகப் பிறந்த குழந்தையை ஒவ்வாமை மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
தாய்ப்பால் ஊட்டச்சத்தை அளிக்கிறது மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள், புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளது. வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க குழந்தைக்கு தேவையான ஆன்டிபாடிகளும் இதில் உள்ளன.
எனவேதான் குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்க மருத்துவர்கள் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள்.
பெங்களூரு மதர்ஹுட் மருத்துவமனை மருத்துவர் கிருஷ்ண பிரசாத் ஜே ஆர் கருத்துப்படி, தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு காது நோய்த்தொற்றுகள், சுவாச நோய் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை குறைவாக இருக்கும். தாய்ப்பால் எளிதில் ஜீரணமாகும், உங்கள் குழந்தைக்கு எங்கு, எப்போது தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் கிடைக்கும், என்கிறார்.
தாய்ப்பால் கொடுப்பது எவ்வளவு காலம் தொடரலாம்?
உலக சுகாதார அமைப்பு (WHO) தாய் தனது குழந்தைக்கு குறைந்தது ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது, அதைத் தொடர்ந்து மற்ற உணவுகளை அறிமுகப்படுத்தலாம். ஆனால், இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேல் தாய்ப்பால் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
இது ஆரோக்கியமான பால் விநியோகத்தை உறுதி செய்யும். பிறந்த முதல் சில வாரங்களில், உங்கள் குழந்தைக்கு தேவைக்கேற்ப உணவளிக்கவும் (அவர்களுக்கு பசி எடுக்கும் போது). இது ஒவ்வொரு இரண்டு மணிநேரமும் இருக்கலாம். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு 4 மணி நேரத்திற்கும் மேலாக (இரவில் கூட) உணவளிக்காமல் இருக்கக்கூடாது.
தாய்க்கு உணவளிக்க முடியாவிட்டால் என்ன செய்வது?

சில குழந்தைகள் ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் தாய்ப்பால் குடிக்க விரும்பலாம், சில சமயங்களில் தாய்மார்கள் தொடர்ந்து கொடுக்க முடியாமல் போகலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், குழந்தைக்கு தாய்ப்பால் மற்றும் பேபி ஃபார்முலா இரண்டையும் அவர்கள் தேர்வு செய்யலாம், என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார்.
எப்போது செய்யலாம்?
* தாய்ப்பால் கொடுப்பது ஒரு விருப்பமாக இல்லாதபோது.
* 24 மணிநேரமும் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாதபோது
* அவர்கள் வளர்ச்சியடையாத மார்பகங்களைக் கொண்டிருக்கலாம், அல்லது அவர்களால் போதுமான பால் உற்பத்தி முடியாமல் போகலாம்.
“காம்பினேஷன் ஃபீடிங் உங்கள் குழந்தைக்கு பசியில்லாமல் இருப்பதையும், அவர்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறுவதையும் உறுதி செய்கிறது என்று மருத்துவர் முடிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“