ஒரு புதிய தாய்க்கு தாய்ப்பால் கொடுப்பது சற்று சவாலாக இருக்கலாம். குறிப்பாக குழந்தைக்கு பிரத்யேகமாக தாய்ப்பால் கொடுக்கும்போது சில தாய்மார்களுக்கு போதுமான அளவு பால் சுரப்பதில்லை. இங்குதான் பவர்-பம்பிங் வருகிறது.
ஹெல்த்லைன், இதை கிளஸ்டர் ஃபீடிங்கைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு நுட்பமாக வரையறுக்கிறது, இது அதிக தாய்ப்பாலை உற்பத்தி செய்ய உங்கள் உடலை ஊக்குவிக்கும்.
கிளஸ்டர் ஃபீடிங் என்பது ஒரு குழந்தை ஒவ்வொரு சில மணி நேரங்களுக்கும் அதிக உணவுகளை விரும்புவதாகும்.
பவர் பம்ப் செய்வது இதேபோன்ற முடிவுகளைத் தரும் என்று நம்பப்படுகிறது, ஏனெனில் இது தாய்க்கு அடிக்கடி பம்ப் செய்ய உதவுகிறது, இதனால் அவரது உடல் இயற்கையாகவே பால் விநியோகத்தை அதிகரிக்கிறது.
பாலிவுட் நடிகை நேஹா துபியா ஒருமுறை, பவர் பம்பிங் மூலம் பால் விநியோகத்தை அதிகரிப்பதற்கான வழிமுறையை தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருந்தார். குழந்தைக்கு பாலூட்டிய உடனேயே தாய் 20 நிமிடங்களுக்கு பம்ப் செய்ய வேண்டிய 60 நிமிட செயல்முறையை இது விளக்கியது.
குழந்தைக்கு பாலூட்டிய பிறகு உடனே பம்பிங் செய்யவும். உங்களுக்கு பால் அவ்வளவு வரவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பிறகு 10 நிமிட இடைவெளி விடவும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தொடர்ந்து 10 நிமிட பம்பிங், 10 நிமிட ஓய்வு மற்றும் 10 நிமிடம் பம்பிங் செய்ய வேண்டும். தாய்ப்பாலை அதிகரிக்க ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இதை மீண்டும் செய்ய வேண்டும்.
இதை மேலும் விளக்கிய, குழந்தை மருத்துவர் கிருஷ்ண பிரசாத் ஜே.ஆர். பிரெஸ்ட் பம்பிங் நுட்பம் உடலைப் பொறுத்தது, அதற்கு பொதுவான விதிகள் எதுவும் இல்லை. இதில், நீங்கள் குறைந்த நேர இடைவெளியில் அடிக்கடி தாய்ப்பாலை பம்ப் செய்ய வேண்டும், இதனால் உங்கள் உடல் தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டும், என்று அவர் கூறினார்.
பிரெஸ்ட் பம்பிங் செய்யும் போது ஓய்வு எடுக்க வேண்டும். இடைவேளையின்றி செய்வது மார்பக வலி அல்லது முலைக்காம்பு வலிக்கு வழிவகுக்கும்.
பவர்-பம்பிங் அமர்வின் நேரம் தாயின் உடலைப் பொறுத்தது. சில பெண்கள் 1-மணிநேர அமர்வு மூலம் சிறந்த முடிவுகளைக் காணலாம், மற்றவர்கள் தாய்ப்பாலை அதிகரிப்பைக் காண ஒரு வாரத்திற்கு ஒரு நாளைக்கு 2 மணிநேரம் தேவைப்படலாம்.
குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு இந்த அட்டவணையை நீங்கள் பின்பற்ற வேண்டும். சில தாய்மார்கள் ஒரு வாரத்திற்குப் பிறகு தங்கள் தாய்ப்பாலின் அதிகரிப்பைக் காணத் தொடங்குகிறார்கள்; சிலர் மாற்றங்களைக் காண இரண்டு வாரங்களுக்கு பவர்-பம்ப் செய்ய வேண்டும், என்றார் டாக்டர் கிருஷ்ணா.
பல தாய்மார்கள் தங்கள் பால் விநியோகத்தை அதிகரிக்க சப்ளிமெண்ட்ஸ் அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் பவர் பம்பிங் எப்போதும் சிறந்த மற்றும் விரைவான முடிவுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
குமட்டல், தூக்கமின்மை, தலைவலி போன்ற அறிகுறிகளுடன் வரக்கூடிய மருந்துகளுடன் ஒப்பிடும்போது இது குறைவான ஆபத்தானது என்று மருத்துவர் முடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.