scorecardresearch

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்ததால் புரூஸ் லீ இறந்திருக்கலாம்: புதிய ஆய்வு.. நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?

முரண்பாடாக, ‘Be water my friend’ என்ற மேற்கோளை லீ பிரபலப்படுத்தினார், ஆனால் அதிகப்படியான நீர் இறுதியில் அவரைக் கொன்றது போல் தோன்றுகிறது.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்ததால் புரூஸ் லீ இறந்திருக்கலாம்: புதிய ஆய்வு.. நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?
Bruce lee

புரூஸ் லீ, ஜூலை 1973 இல் தனது 32 வயதில் காலமானார், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, புகழ்பெற்ற கலைஞரின் மரணத்திற்குப் பின்னால் உள்ள சரியான காரணத்தை ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. புரூஸ் லீ இறப்பதற்கு மூளை வீக்கம் தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. இது அவர் எடுத்துக் கொண்ட வலிநிவாரணியின் எதிர்வினையாக கருதப்படுகிறது. இருப்பினும், அவரது “அதிகப்படியான நீரை வெளியேற்றும் சிறுநீரகத்தின் இயலாமை” தான் அவரது அகால மரணத்திற்கு வழிவகுத்தது என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது.

ஸ்பெயினில் சிறுநீரக நிபுணர்கள் குழு நடத்திய இந்த ஆய்வு, கிளினிக்கல் கிட்னி இதழில் வெளியிடப்பட்டது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற சிறுநீரகத்தின் இயலாமை புரூஸ் லீயைக் கொன்றது. அவரிடம் hyponatraemia-வுக்கான பல ஆபத்து காரணிகள் (இரத்தத்தில் குறைந்த அளவு சோடியம்) இருந்தது. லீ தனது fluid diet காரணமாக வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு திரவத்தை உட்கொண்டிருக்கலாம், அதில் நிறைய பழச்சாறுகள் மற்றும் புரத பானங்கள், மேலும் தாகத்தை அதிகரிக்கும் கஞ்சா பயன்பாடு இருந்தன என்று ஆய்வு ஆசிரியர்கள் கூறினர்.

சுருக்கமாக, நீர் உட்கொள்ளல் மற்றும் நீர் வெளியேற்றம் ஆகிய இரண்டையும் ஒழுங்குபடுத்தும் water homeostasis mechanisms குறுக்கீடு செய்வதன் விளைவாக  ஹைபோநெட்ரீமியாவிற்கு (hyponatraemia) அவரைத் தூண்டும் பல ஆபத்து காரணிகளை லீ கொண்டிருந்தார்.

அதிகப்படியாக உட்கொள்ளும் நீர், சிறுநீரில் தேவையான அளவு வெளியேறவில்லை என்றால் இது மரணத்துக்கு கூட வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

அதிகமாக தண்ணீர் குடிப்பது தீங்கு விளைவிக்கும்!

முரண்பாடாக, ‘Be water my friend’ என்ற மேற்கோளை லீ பிரபலப்படுத்தினார், ஆனால் அதிகப்படியான நீர் இறுதியில் அவரைக் கொன்றது போல் தோன்றுகிறது.

இந்த அதிர்ச்சியூட்டும் ஆய்வு ஒரு முக்கியமான கேள்விக்கு நம்மைக் கொண்டு வருகிறது: அதிகப்படியான தண்ணீரை உட்கொள்வது தீங்கு விளைவிக்குமா? அதிகப்படியான நீர் நுகர்வு காரணமாக பல இறப்புகள் நிகழ்ந்துள்ளன. அதிகப்படியான நீர் நுகர்வு மூளைக் காயத்தை அதிகரிக்கும் அல்லது உங்கள் மண்டை ஓட்டின் உள்ளே அழுத்தத்தை அதிகரிக்கலாம், இது தீவிர சூழ்நிலைகளில் மரணம் விளைவிக்கும்.

ஒரு நபர் தனது சிறுநீர் மூலம் வெளியேற்றும் தண்ணீரை விட அதிக தண்ணீரை உட்கொள்ளும்போது Overhydration மற்றும் water intoxication ஏற்படுகிறது என்று டாக்டர் மனோஜ் மேத்தா தெரிவித்தார்.

டாக்டர் ஆதித்யா சௌடி கூறுகையில், அதிகப்படியான தண்ணீரை உட்கொள்வதால் ஒருவர் இறப்பது மிகவும் அரிதான நிகழ்வு. அதிகப்படியான நீர் உட்கொள்ளல், நம் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்களில் தொந்தரவுகளைத் தூண்டுகிறது, இதையொட்டி, உடலில் சோடியம் அளவு குறைந்து, வலிப்பு, மூளையில் வீக்கம் மற்றும் இறுதியில் மரணம் ஏற்படலாம் என்று அவர் கூறினார்.

சாதாரண சிறுநீரகங்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு குவார்ட்டர் திரவத்தை வெளியேற்றும் திறன் கொண்டவையாக இருந்தாலும், அதை விட அதிகமாக உட்கொள்வது ஹைபோநெட்ரீமியாவை ஏற்படுத்துகிறது என்று டாக்டர் மேத்தா விளக்கினார்.

கடுமையான ஹைபோநெட்ரீமியா பாதிப்புகள் மூளை வீக்கம், குழப்பம், வலிப்பு, கோமா மற்றும் மரணம் போன்ற நரம்பியல் அறிகுறிகளை அதிகரிக்கும்,  என்று அவர் கூறினார்.

நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?

நீர் உட்கொள்ளலுக்கு என்று அதிகாரப்பூர்வ பரிந்துரைகள் எதுவும் இல்லை.

சில ஆதாரங்கள் water intoxication தவிர்க்க ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 0.8 முதல்1 லிட்டருக்கு மேல் தண்ணீர் உட்கொள்ளக்கூடாது என்று பரிந்துரைக்கின்றன. அதிகப்படியான தண்ணீரை உட்கொள்வது மனநல நோய்களையும் ஏற்படுத்துகிறது, என்று நிபுணர் கூறினார்.

உங்கள் உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை உட்பட பல காரணிகள் பொறுத்து, ஒவ்வொரு நாளும் நீங்கள் உட்கொள்ளும் திரவங்களின் மொத்த அளவை சரிசெய்ய வேண்டியிருக்கலாம். பொதுவான விதியாக, ஒருவர் எளிய கணக்கீடுகளை செய்யலாம்.

ஒவ்வொரு நாளும் குடிக்க வேண்டிய தண்ணீர் (லிட்டரில்) = உங்கள் எடை (கிலோவில்) x 0.033. உதாரணமாக, நீங்கள் 60 கிலோவாக இருந்தால், ஒவ்வொரு நாளும் சுமார் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்,என்று நிபுணர் பரிந்துரைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Bruce lee death overhydration health drinking too much water