ஒரு முறை கல்யாண வீட்டில் செய்யும் முட்டைகோஸ் கூட்டை நீங்களும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் – அரை கிலோ
பாசி பருப்பு – 100 கிராம்
கடலை பருப்பு – 100 கிராம்
தேங்காய் 4 பல்லு
வெங்காயம் 2
தக்காளி 3
காய்ந்த மிளகாய் 6
பச்சை மிளகாய் 4
பூண்டு 10 பல்லு
சீரகம் அரை டீஸ்பூன்
மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
மிளகாய் பொடி அரை ஸ்பூன்
தனியாக பொடி 1 ஸ்பூன்
பெருங்காயம் கால் ஸ்பூன்
கருவேப்பிலை
அரை ஸ்பூன் கடுகு
நல்லெண்ணை தேவையான அளவு
உப்பு
செய்முறை : முதலில் மிக்ஸியில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு போடவும். தொடர்ந்து கருவேப்பிலை, வத்தல் , வெங்காயம் சேர்த்து கிளரவும். நன்றாக வதங்கியதும் பூண்டு சேர்த்து கிளரவும். தொடர்ந்து மல்லித்தூள், மஞ்சள், தூள், மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக கிளரவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து கிளர வேண்டும். தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். தொடர்ந்து அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் முட்டைகோஸ் சேர்த்து கிளவும். தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். தொடர்ந்து பாசி பருப்பு, கடலை பருப்பு வெந்ததை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் எண்ணெய், கடுகு, பூண்டு, தக்காளி, கருவேப்பிலையை தாளித்து கொட்டவும்.