முந்திரி, நெய் சேர்த்து சுவையான பன்னீர் கிரேவி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் – 200 கிராம்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 4
முந்திரி – 50 கிராம்
க்ரீம் – 2 டீஸ்பூன்
தனியாத் தூள் (மல்லித் தூள்) – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை கலவை – 10 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 50 மில்லி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பன்னீர் துண்டுகளை ப்ரை செய்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து முந்திரியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பச்சை வாசனை போனதும், தனியாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் உப்பு, அரைத்த முந்திரி விழுது சேர்த்து கிரேவி பதத்துக்கு கொதிக்க விடவும்.
இப்போது பன்னீர் துண்டுகள், க்ரீம், நெய், கொத்த மல்லி இலை சேர்த்து இறக்கினால் யம்மியான பன்னீர் கிரேவி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“