இந்த புதுவித மசாலாவை சேர்த்து காலிபிளவர் பிரை செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
அரை கட்டு கொத்தமல்லி
அரை துண்டு இஞ்சி
3 பச்சை மிளகாய்
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 காளிபிளவர்
1 எலுமிச்சை
உப்பு
முக்கால் டீஸ்பூன் கடலை மாவு
முக்கால் டீஸ்பூன் சோள மாவு
முக்கால் டீஸ்பூன் அரிசி மாவு
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை : மிக்ஸியில் கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து பேஸ்டாக அரைத்துகொள்ளவும். காலிபிளவர் நறுகியதை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொண்டு,இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாற, உப்பு, கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு சேர்க்கவும். தொடர்ந்து அரைத்த பேஸ்டை சேர்த்து கிளரவும். இதை எண்ணெய்யில் பொறித்து எடுத்தால் மிகவும் நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“