ஒன்னும் இல்லாத தரிசு நிலத்தில் இவங்க எப்படி விவசாயம் பாக்க போறாங்கனு ஏளனமா பேசுன இந்த ஊரு ஆண்கள், இப்போ நாங்க தரமான காய்கறிகளை நல்ல முறையில விவசாயம் செய்ஞ்சு கொடுக்கிறதுனால இப்போ எங்ககிட்ட வந்து எப்படி பூச்சி இல்லாத காய்கறிகளை செய்றீங்கனு கேட்கிறாங்க..
Advertisment
பெண்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்து, ஒரு வேலை செய்யும் போது அது நல்லமுறையா அமையுங்கிறதுக்கு இதான் ஒரு உதாரணம் என்கிறார், பெண்கள் இயற்கை வேளாண் கூட்டுறவு அமைப்பைச் சேர்ந்த பாக்கிய லட்சுமி…
இதுகுறித்து DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ
Advertisment
Advertisements
கிராமப்புற பெண்களை ஒருங்கிணைத்து, அவர்களை இயற்கை விவசாயத்துல ஈடுபடுத்தி, இந்த மண்ண பக்குவப்படுத்தி நல்ல விளைச்சல் உள்ள நிலமா மாத்தணும்.. இது ஒரு சவாலா எடுத்துக்கணும், இது விட்டுட்டு வெளியே போகக் கூடாதுனு ஒரு குறிக்கோள் ஓட நாங்க எல்லாருமே வேலை செய்ஞ்சோம், என்றார் பாக்கிய லட்சுமி.
இந்த அமைப்பைச் சேர்ந்த சத்யா என்ற பெண் விவசாயி கூறுகையில், இயற்கை முறையில விவசாயம் பண்ண சொன்னாங்க, ஆனா அது எப்படி பண்றது, நடைமுறையில சாத்தியமான்னு யோசிச்சோம்.
நாங்க 15 பேரு ஒரு குழுவா சேர்ந்து, இயற்கை முறையில விவசாயம் செய்யலாம்னு முடிவு பண்ணோம், இதுல இருந்து எங்களுக்கு வருமானமும் கிடைச்சது.
7 ஏக்கர் பயிர் வச்சோம், அதுல ஒரு ஏக்கருக்கு 70, 80 ஆயிரம் ரூபாய் கிடைச்சது, கடன் அடைச்சுட்டு பேங்க்ல டெபாசிட் பண்ணி வச்சுருக்கோம். அதுபோக மீதித் தொகைய நாங்க 15 பேரும் குடும்ப செலவுக்காக பிரிச்சிக்கிட்டோம், என்றார்…
கிராமத்து பெண்கள் என்றாலே ஏளனமாக பார்க்கப்படும் நவீன காலத்தில், விவசாயமே செய்ய முடியாது என கைவிடப்பட்ட நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடும் வியர்வை சிந்தி, அதற்கு இயற்கை விவசாயம் மூலம் உயிரூட்டி அதன்மூலம் இன்று மாத சம்பளத்துக்கு நிகராக ஒரு வருவாயை ஈட்டி வருகின்றனர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வெளியம்பாக்கம் கிராம பெண்கள் இயற்கை வேளாண் கூட்டுறவு அமைப்பினர்…
இதற்கு மத்திய வங்கியும் நிதி உதவி வழங்கியுள்ளது.
இந்த பெண்கள் நிலத்தில் பயிரிடுவதற்கு விதைகளை பணம் கொடுத்து வாங்குவது கிடையாது. ஒவ்வொரு அறுவடைக்கு பிறகும், விதைகளை சேகரித்து அந்த கிராமத்தில் இருக்கும் மற்ற விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கின்றனர்..
பெண்கள் இயற்கை வேளாண் கூட்டுறவு அமைப்பினரின் பெயரில் 2 செண்ட் நிலம், சொந்த வாகனம் என இயற்கை விவசாயம் மூலம் ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்..
தரிசு நிலத்தை வளமாக்கியது மட்டுமின்றி, தாங்களே ஒன்றிணைந்து ஒரு கிணறையும் தோண்டி முப்போக விளைச்சலுக்கு வித்திட்டுள்ளனர்.
ஆரம்பத்துல வயலுக்கு வரணும்னா சைக்கில் கூட கிடையாது, நடந்துதான் வரணும். ஆனா இப்போ விவசாயம் பண்ணி அதுல லாபம் எடுத்து ஒருசிலர் வண்டி வாங்கி இருக்காங்க.. சில பெண்கள் வீட்டு மனை வாங்கி இருக்காங்க என்று பெருமிதத்துடன் கூறுகிறார் பாக்கிய லட்சுமி..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“