உங்களின் அன்பானவர்களுக்கு அவர்களையே பரிசளியுங்கள், ‘மினியேச்சர்’ பொம்மைகளாக

ஆனால், நம் விருப்பமானவர்களுக்கு அவரையே பரிசாக அளித்தால் எப்படியிருக்கும்? ஆச்சரியமா இருக்குதா? அதுக்குத்தான் ‘மை க்யூட் மினி’ டீம் இருக்கு.

நம் வாழ்வில் மறக்க முடியாத அன்புக்குரியவர்களின் அழகிய தருணங்களில், நினைவுகளில் அழியாத பரிசுகளையே கொடுக்க விரும்புகிறோம். திருமணம், பிறந்த நாள், காதலர் தினம் என எல்லா நிகழ்வுகளிலும், நாம் மிகவும் மெனக்கெடுப்பது ஒரு விஷயத்துக்காகத்தான் இருக்கும். என்ன பரிசுப்பொருள் வாங்கிக்கொடுப்பது என்பதை நிகழ்ச்சிக்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே யோசித்துக் கொண்டிருப்போம். கிஃப்ட் என்றவுடனேயே காஃபி மக், சுவர்க்கடிகாரம், கைக்கடிகாரம், கப் அண்ட் சாசர் என, அருதப்பழசான பொருட்கள்தான் பெரும்பாலானோருக்கு நியாபகம் வரும். ஆனால், நம் விருப்பமானவர்களுக்கு அவரையே பரிசாக அளித்தால் எப்படியிருக்கும்? ஆச்சரியமா இருக்குதா? அதுக்குத்தான் ‘மை க்யூட் மினி’ டீம் இருக்கு.

நாம் யாருக்கு பரிசு கொடுக்கப்போகிறோமோ, அவர்களையே சிறிய அளவில்மினியேச்சர் பொம்மைகளாக செய்து தருகிறார்கள் ‘மை க்யூட் மினி’. இந்நிறுவனத்தை ஆரம்பித்த ஸ்ரீ ஹரிசரணிடம் பேசினோம். “நான் கணினி அறிவியலில் பொறியியல் முடித்திருக்கிறேன். கல்லூரியில் படிக்கும்போதே, கலை மீது எனக்கு தீராத ஆர்வம் இருந்தது. ஓவியம் வரைதல், சிற்பங்கள் செதுக்குதல், வெப் டிசைனிங் இதெல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்.”, எனக்கூறும் ஸ்ரீ ஹரிசரண், கல்லூரி இறுதியாண்டில் மினியேச்சர் பொம்மைகள் செய்வதை ஹாபியாக கொண்டிருக்கிறார்.

அதன்பிறகு, 2 ஆண்டுகள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார் ஹரிசரண். ஆனால், அதில் அவருக்கு திருப்தி இல்லை. தனக்கு பிடித்த கலையில் கால்பதிக்க வேண்டும் என நினைத்தார். தன் நண்பர்கள் மற்றும் சகோதரர் சபரி சரண் ஆனந்துடன் இணைந்து 2013-ஆம் ஆண்டு ‘மை க்யூட் மினி’ எனும் நிறுவனத்தை ஆரம்பித்து, மினியேச்சர் பொம்மைகளை தயாரிப்பதை முழுநேர வேலையாக கொண்டார்.

மினியேச்சர் பொம்மைகள் செய்ய சரியான பொருளை தேடுவதில் ஹரிசரணுக்கு சிரமம் இருந்தது. “ஆரம்பத்தில் கற்கள் மூலம் மினியேச்சர் பொம்மைகள் செய்ய ஆரம்பித்தேன். ஆனால், அது ரொம்ப செலவாகும். பொம்மைகளின் இறுதி வடிவமும் எதிர்பார்த்த மாதிரி வரவில்லை. அதன்பிறகு சிந்தெடிக் செராமிக் மூலம் மினியேச்சர் பொம்மைகளை செய்தேன். அதில், பொம்மைகள் நன்றாக வந்தன. வெளிநாடுகளில் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் இத்தகைய மினியேச்சர் பொம்மைகளை செய்து, அதன்பின் ஸ்கேன் செய்து பிரிண்ட் எடுத்து முழுக்க தொழில்நுட்பத்தின் உதவியுடனேயே செய்வார்கள். ஆனால், நாங்கள் அப்படியில்லை. முற்றிலும் நாங்கள் கைகளாலேயே பொம்மைகளை தயார் செய்கிறோம். இதன் மூலம், பொம்மைகளின் இறுதி வடிவம் சிறப்பானதாக இருக்கும்”, என்கிறார் ஹரிசரண்.

இவர்களுடைய மினியேச்சர் பொம்மைகள் எல்லோரையும் கவர்ந்திழுத்தன. மனிதர்கள் சிறிய பொம்மைகளாகி சிரித்துக் கொண்டிருப்பதை யார்தான் விரும்ப மாட்டார்கள். இவர்களுடைய முகநூல் பக்கத்திலிருந்தும் பல ஆர்டர்கள் குவிய ஆரம்பித்தன. இந்தியா முழுவதிலும் இவர்கள் மினியேச்சர் பொம்மைகளை இணையத்தளம் மூலம் விற்பனை செய்கிறார்கள். குஷ்பு, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பிரபலங்களும், ‘மை க்யூட் மினி’ நிறுவனத்தின் கஸ்டமர்கள்தான்.

நீங்களும் உங்கள் மனம் கவர்ந்தவர்களின் மினியேச்சர்களை அவர்களுக்கு பரிசளிக்க வேண்டுமா? எப்போது பரிசளிக்க வேண்டுமோ, அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அவர்களின் புகைப்படத்தை கொடுத்து ஆர்டரை புக் செய்துவிட வேண்டும். ஒரு மினியேச்சர் பொம்மை தயார் செய்ய 10 நாட்களாகும் என்றாலும், சிறிய டீம் என்பதால், உங்களின் ஆர்டர் கைகளில் கிடைக்க ஒருமாதமாகும். ஒரு பொம்மை ரூ.4,250, ஜோடி பொம்மைகள் என்றால் ரூ.8,250. இனிமே, என்ன பரிசுபொருட்கள் வாங்க வேண்டும் என்பதை நீங்கள் யோசிக்கவே வேண்டாம்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai based my cute mini creates miniature versions for clients

Next Story
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும்Raman - ravanan - seethai
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com