Advertisment

கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய நம்ம ஊர் திருவிழா!

ஆண்டுதோறும் ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் இவ்விழாவை தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

author-image
Janani Nagarajan
புதுப்பிக்கப்பட்டது
New Update
கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய நம்ம ஊர் திருவிழா!

தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் பலர் கலந்துகொண்டனர்

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை மக்களின் மத்தியில் போற்றப்படும் வண்ணம் 'நம்ம ஊர் திருவிழா' சென்னை தீவுத்திடல் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த ஆண்டு ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் இவ்விழாவை தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

Advertisment
publive-image
திருவண்ணாமலை குமார் குழுவினரின் கட்டைக் கூத்து
publive-image
கிருஷ்ணகிரி மஞ்சுநாதன் பம்பை மேளம்
publive-image
கோவை சாமிநாதன் துடும்பு மேளம்
publive-image
ராமநாதபுரம் முருகன் நையாண்டி மேளம்

இவ்விழாவை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, முதல்வரின் உதவியாளர் டி. உதயசந்திரன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

மேலும், சென்னை மேயர் பிரியா, சந்திரமோஹன் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபு, மற்றும் பலர் கலந்துகொண்டனர்

publive-image
திருநெல்வேலியிலிருந்து மகுடம் மேளம்
publive-image
கலைமாமணி முத்துச்சந்திரன் மற்றும் தோல்பாவைக்கூத்து குழுவினர்
publive-image
மதுரை ஏ.ஆர்.வி.யின் சிலம்பம் அகாடெமியின் திங்களரசன் குழுவினர் வழங்கிய புளியாட்டம், சேலம் ஜெயம் கலைக்கூட்டம் வழங்கிய மான்கொம்பாட்டம்
publive-image
திருவண்ணாமலை முனுசாமி குழுவினரின் பெரிய மேளம்

சென்னை அரசு இசைக் கல்லூரி மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி, அதைத் தொடர்ந்து ஆனந்தன் குழுவினரின் மங்கள இசை, திருவண்ணாமலை குமார் குழுவினரின் கட்டைக் கூத்து, மதுரை தட்சிணாமூர்த்தி குழுவினரின் கொம்பு இசை, திருவண்ணாமலை முனுசாமி குழுவினரின் பெரிய மேளம் ஆகியவை நடைபெற்றது.

publive-image
அலங்காநல்லூர் வேலு ஆசானின் தமிழ் கலைக்குழு வழங்கிய தப்பாட்டம்

தென்காசி கண்ணன், ராமமூர்த்தி குழுவினரின் மகுடம் குழுவினருடன் இணைந்து இசை கச்சேரி, கோவை சாமிநாதன் துடும்பு மேளம், கிருஷ்ணகிரி மஞ்சுநாதன் பம்பை மேளம், ராமநாதபுரம் முருகன் நையாண்டி மேளம், கண்கவர் நடன வடிவங்கள், கலை வடிவங்கள் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் நடைபெற்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Art And Culture
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment