Advertisment

எண்ணெய் பிசுக்கு படிந்த பாத்திரங்களை சரியாக சுத்தம் செய்வது எப்படி?

சமையலறை பாத்திரங்களை சரியாக சுத்தம் செய்வது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் பிற நோய்க்கிருமிகளின் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்க உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Effective methods for grease removal

நாம் அனைவரும் நம் சமையலறைகளில் புதிய உணவுகளை பரிசோதித்து உருவாக்க விரும்புகிறோம். ஆனால் சமைத்த பிறகு அந்த பாத்திரங்களை சுத்தம் செய்வது சில சமயங்களில் ஒரு உண்மையான சவாலாக இருக்கலாம், குறிப்பாக பாத்திரம் கருகி எரியும் போது. நாம் அனைவரும் அந்த மோசமான உணவுக் கறைகளையும், பாத்திரங்களில் சிக்கிய எச்சங்களையும் அகற்றுவதற்கான போராட்டத்தை அனுபவித்திருக்கிறோம். வழக்கமான பாத்திரங்களைக் கழுவும் ஜெல் மற்றும் பார்கள் பெரும்பாலும் கறையில்லாமல் சுத்தம் செய்யத் தவறிவிடுகின்றன.

Advertisment

நீங்களும் அதே போராட்டத்திற்கு உள்ளானால், இந்த பதிவு உங்களுக்காக மட்டுமே.

சோ, வியட்நாமிஸ் கிச்சன் அண்ட் பார் செஃப் வைபவ் பார்கவாவின் கூற்றுப்படி, சமையலறை பாத்திரங்களை சரியாக சுத்தம் செய்வது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் பிற நோய்க்கிருமிகளின் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்க உதவுகிறது.

பாத்திரங்களைத் தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம், உணவினால் பரவும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம், என்று அவர் மேலும் கூறினார்.

UNOX செஃப் நிகில் ரஸ்தோகி இடம் கூறுகையில், பாத்திரங்களை முறையாக சுத்தம் செய்வதன் மூலம் அவற்றின் நீண்ட ஆயுளையும் பாதுகாக்க முடியும், ஏனெனில் காலப்போக்கில் கிரீஸ் குவிவதால் பாத்திரங்களில் அழுக்கு படிவதற்கு வழிவகுக்கும். அதில் அவற்றால் தயாரிக்கப்படும் உணவின் சுவை பாதிக்கப்படலாம்.

உங்கள் பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பிசுக்கை முழுவதுமாக கழுவ இந்த சமையல்காரர்களின் சில குறிப்புகள் இங்கே

Effective methods for grease removal

நான் ஸ்டிக் பாத்திரத்தில் பயன்படுத்த வேண்டாம்

பேக்கிங் சோடா பயன்படுத்தவும்

பானை, பான் மற்றும் சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு பேக்கிங் சோடாவைப் பயன்படுத்த பார்கவா பரிந்துரைத்தார், ஏனெனில் இது லேசான சிராய்ப்பு மற்றும் நாற்றங்களை நடுநிலையாக்க உதவுகிறது.

பேக்கிங் சோடாவின் மென்மையான சிராய்ப்பு தன்மை மேற்பரப்பில் கீறல் இல்லாமல் அழுக்குகளை அகற்ற உதவுகிறது. ஆனால் ஸ்கிராட்ச் ஏற்படுவதைத் தடுக்க மென்மையான அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தில் அதை பயன்படுத்த வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

வெந்நீரில் ஊற வைக்கவும்

உங்கள் க்ரீஸ் பாத்திரங்களை ஸ்க்ரப் செய்வதற்கு முன் வெந்நீரில் ஊறவைக்க ரஸ்தோகி பரிந்துரைத்தார், ஏனெனில் இது கிரீஸை தளர்த்த உதவும். வெந்நீர் மற்றும் டிஷ்வாஷிங் லிக்குவட் நிரப்பப்பட்ட ஒரு சிங்கில் அவற்றை ஊறவைக்க அவர் பரிந்துரைத்தார்.

ஒரு ஸ்க்ரப் அல்லது ஸ்பாஞ்சை பயன்படுத்தி கிரீஸை வேகமாக தேய்க்கவும். தொடர்ந்து இருக்கும் பகுதிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கவும், என்று அவர் கூறினார்.

வெஜிடபிள் ஆயில்

இது ஆச்சரியமாகத் தோன்றலாம் ஆனால் ரஸ்தோகி மற்றும் பார்கவா இருவரின் கூற்றுப்படி, எண்ணெய்களைக் கரைத்து உடைக்கும் திறன் காரணமாக பாத்திரங்களில் இருந்து பிசுபிசுப்பை அகற்றுவதில், தாவர எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும்.

ரஸ்தோகி, எண்ணெய் படிந்த பாத்திரங்களில் தாவர எண்ணெயைப் பயன்படுத்தவும், அவற்றை ஸ்க்ரப் செய்வதற்கு முன் சிறிது நேரம் அப்படியே வைக்கவும் பரிந்துரைத்தார்.

எவ்வாறாயினும், இந்த முறை தூசி மற்றும் பிற துகள்களை ஈர்க்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், இது தொடர்ந்து சுத்தம் செய்யப்படாவிட்டால் அழுக்கு குவிவதற்கு வழிவகுக்கும்.

எலுமிச்சை மற்றும் வினிகர்

Effective methods for grease removal

எலுமிச்சை மற்றும் வினிகரின் அமிலத்தன்மை காரணமாக, பாத்திரங்களில் உள்ள கிரீஸை அகற்றுவதற்கு அவற்றைப் பயன்படுத்த பார்கவா பரிந்துரைத்தார்.

எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் சம அளவு கலந்து க்ரீஸ் பரப்புகளில் தடவி, அதை கழுவுவதற்கு முன் சில நிமிடங்கள் அப்படியே வைக்கவும், என்று அவர் கூறினார்.

குறிப்பு: உங்கள் பாத்திரத்தின் மேற்பரப்பை சேதப்படுத்தாமல் அல்லது நிறமாற்றம் செய்யாமல் இருப்பதை உறுதிசெய்ய, எந்த ஒரு கிளீனிங் சொல்யூஷனையும் முதலில் ஒரு சிறிய, தெளிவற்ற பகுதியில் சோதிக்க நினைவில் கொள்ளுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment