ஆண்டு தோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் இன்று காதலர் தின கொண்டாட்டம் நடந்தது. அப்போது அங்கு கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த கவுதம் (25), சேலம் மேட்டூர் ரீனா ஜெனிட்டா (23) ஆகியோர் மாலை மாற்றி காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.


இதேபோல் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கேக் வெட்டி வானில் இதய வடிவிலான பலூன்கள் பறக்க விடப்பட்டன.
இதேபோல் பல்வேறு பகுதிகளில் காதலர்கள் ரோஜா பூக்கள், பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்து அன்பை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“