Advertisment

2 செ. மீட்டர், 64 பக்கங்கள், 7 மொழிகள்- கோவை பொறியாளர் உருவாக்கிய அப்துல் கலாம் பொன்மொழிகள் மைக்ரோ புத்தகம்

கட்டுமான பொறியாளர் லூயீஸ் (42), கலாமின் பொன்மொழிகள் அடங்கிய 2 செ.மீ உயரம், 1.5 செ.மீ அகலம் என 64 பக்கங்கள் கொண்ட கையடக்க புத்தகம் தயார் செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore engineer made Abdul kalam quotes micro books

மறைந்த டாக்டர் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பொறியாளர், அப்துல் கலாம் பொன்மொழிகள் அடங்கிய கையடக்க புத்தகத்தை தயார் செய்து - அதனை பழங்குடி கிராம பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்குகிறார்.

Advertisment

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 8வது ஆண்டு நினைவு தினம் நாளை இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அப்துல் கலாம் நினைவு நாளில் கோவை - கேரளா எல்லையில் உள்ள பழங்குடி கிராம பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு அப்துல் கலாம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அவரது பொன்மொழிகளை இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்பதற்காக கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த கட்டுமான பொறியாளர் லூயீஸ் (42), கலாமின் பொன்மொழிகள் அடங்கிய 2 செ.மீ உயரம், 1.5 செ.மீ அகலம் என 64 பக்கங்கள் கொண்ட கையடக்க புத்தகம் தயார் செய்துள்ளார்.

Abdul kalam quotes micro books
Abdul kalam quotes micro books

தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெழுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், உள்ளிட்ட 7 மொழிகளில் சுமார் 10 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. ஆனைக்கட்டி, மாங்கரை, வயநாடு உள்ளிட்ட பழங்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த புத்தகங்களை லூயீஸ் வழங்குகிறார்.

விரைவில் 22 மொழிகளில் அப்துல் கலாம் பொன்மொழிகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க உள்ளதாகவும் பொறியாளர் லூயீஸ் தெரிவித்துள்ளார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment