Advertisment

கோவையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு 'தி கிரேட் பாம்பே சர்க்கஸ்'

உலகின் மிகப் பிரபலமான, 102 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள தி கிரேட் பாம்பே சர்க்கஸ், 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவையில் மீண்டும் தொடங்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore

Coimbatore Bombay circus begins on June 23

உலகின் மிகப் பிரபலமான, 102 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள தி கிரேட் பாம்பே சர்க்கஸ், 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவையில் மீண்டும் தொடங்குகிறது.

Advertisment

இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய பாம்பே சர்க்கஸ் நிறுவனத்தின் பார்ட்னர் சஞ்சீவ் கூறுகையில், ஜூன் 23 ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு சர்க்கஸ் நடக்கும். நாள்தோறும் மதியம் 1 மணி, 4 மணி மற்றும் மாலை 7 மணி என மூன்று காட்சிகள் இடம்பெறும்.  ஒவ்வொரு காட்சியும் 2 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும். அவற்றில் 30க்கும் அதிகமான சாகச நிகழ்ச்சிகள் இடம்பெறும். இம்முறை 15க்கும் அதிகமான புதிய சாகசங்கள் நிகழ்வில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் முதல்முறையாக உலக சர்க்கஸ் போட்டிகளில் பங்கு பெற்று வெண்கல பதக்கம் பெற்ற எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

மணிப்பூரிலிருந்து எட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவும், இந்தியா மற்றும் நேபால் ஆகிய நாடுகளில் இருந்து வரக்கூடிய புகழ்பெற்ற கலைஞர்களும் இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் பலவிதமான சாகசங்களை செய்து காண்போரை ஆச்சரியத்துக்குள்ளாக்க காத்திருக்கின்றனர்.

டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கான அறிவிப்புகள்விரைவில் வெளியாகும். டிக்கெட்டுகளின் விலை ரூ.100 முதல் ரூ 400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 400ரூபாய் டிக்கெட்டுகளுக்காக தொலைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மற்ற டிக்கெட்டுகளை நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே வ.உ.சி மைதானத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

400 டிக்கெட்டை முன்பதிவு செய்ய 8893606308, 8778838082, 8714285256 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

publive-image

இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில், கிளப் ஜக்லிங்க், ரோலர் ஆக்ட், ஜிம்னாஸ்டிக் கண்டேஜியன், ஃபுட் ஜக்லிங்க், டவர் பேஸ்கட்பால், ஆக்குரோபேட்டிக் ஹுள்ளா ஹூப், ஐக்காரியன் டியோ ஆக்ட், கண்டார்சன், ஆன்ட்டிபோட் ஆக்ட், ரிதமிக் ஹூஹுள்ளா ஹூப், பாலிங் நைப் வெரைட்டி, ஸ்பியர் பேலன்ஸ், 60 அடி உயரத்தில் பேலன்ஸ் இன் டிராபீஸ், அக்ரபட்டிக் ஸ்கேட்டிங் மற்றும் பல சாகசங்கள் இடம் பெற உள்ளதாகவும் சஞ்சீவ் கூறினார்.

மேலும் குழுவாக வரும் பள்ளி மாணவர்களுக்கு 40% தள்ளுபடி அளிக்கப்படும். இந்தியாவில் தற்போது ஐந்து சர்க்கஸ் கம்பெனிகள் தான் உள்ளது. அழிந்து வரும் தொழிலாக இந்த சர்க்கஸ் தொழில் பார்க்கப்படுகிறது. சினிமாவுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்து வரும் அரசாங்கம் இதற்கு கொடுப்பதில்லை சஞ்சீவ் வேதனை தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment