Advertisment

இந்த உணவுகளை மட்டும் பிரஷர் குக்கரில் சமைக்கவே சமைக்காதீங்க: மருத்துவர் அறிவுறுத்தல்

வெவ்வேறு உணவுகளை எப்படி சமைப்பது என்பது பற்றி புரிந்துகொள்வது பாதுகாப்பான மற்றும் சுவாரஸ்யமான சமையல் அனுபவத்தை கொடுக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pressure Cooker

Foods not to be cooked in pressure cooker

பிரஷர் குக்கர் உணவை சீக்கிரமான சமைப்பதன் மூலம் நம் வாழ்க்கையை எளிதாக்கி உள்ளன, ஆனால் பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாத சில உணவுகளும் உள்ளன.

Advertisment

டாக்டர் சஞ்சய் சிங்கின் கூற்றுப்படி, பிரஷர் குக்கர், திறமையான சமையலறை உபகரணங்களாக இருக்கலாம், ஆனால் சில வகையான உணவுகள் உள்ளன, அவை மற்ற சமையல் முறைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

வெவ்வேறு உணவுகளை எப்படி சமைப்பது என்பது பற்றி புரிந்துகொள்வது பாதுகாப்பான மற்றும் சுவாரஸ்யமான சமையல் அனுபவத்தை கொடுக்கும். அதே வேளையில் சுவை, அமைப்பு மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த உணவுகளை சமைக்கலாம், என்று டாக்டர் சஞ்சய் மேலும் கூறினார்.

உணவியல் நிபுணர் ஷ்ரதா சிங், ’இந்த வரம்புகளைப் பற்றி அறிந்திருப்பது மற்றும் பொருத்தமான சமையல் நுட்பங்களைத் தேர்ந்தெடுப்பது, சமைத்த உணவின் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தரத்தை உறுதி செய்யும், என்று விளக்கினார்.

எனவே, பிரஷர் குக்கரில் ஒருபோதும் சமைக்கக் கூடாத உணவுகள் மற்றும் ஏன் என்பது குறித்து நிபுணர்களிடம் கேட்டோம். பார்க்கலாம்.

வறுத்த உணவுகள் (Deep-fried foods)

டாக்டர் சஞ்சய் கருத்துப்படி, அதிக அழுத்தம் மற்றும் சூடான எண்ணெயுடன் தொடர்புடைய அதிக அபாயங்கள் காரணமாக, உணவுகளை ஆழமாக வறுக்க பிரஷர் குக்கரைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படவில்லை.

டீப் ஃபிரையிங் உணவுக்கு கவனமாக வெப்பநிலை கட்டுப்பாடு தேவைப்படுகிறது, மேலும் பிரஷர் குக்கர் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்படவில்லை.

பிரஷர் குக்கரை டீப்-ஃப்ரை செய்வதற்கு பயன்படுத்தினால், oil splattering அல்லது overheating ஏற்படுவது போன்ற விபத்துகள் ஏற்படலாம், இதனால் தீக்காயம் மற்றும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, என்றார்.

ஆழமாக வறுக்க, பிரத்யேக டீப் பிரையர் அல்லது பாரம்பரிய முறைப்படி முறையான வெப்பநிலை கண்காணிப்புடன் ஒரு பாத்திரத்தில் ஆழமாக வறுப்பது பாதுகாப்பானது என்றும் அவர் கூறினார்.

விரைவாக சமைக்கும் காய்கறிகள்

டாக்டர் சஞ்சயின் கூற்றுப்படி, பட்டாணி, அஸ்பாரகஸ் மற்றும் சுரைக்காய் போன்ற காய்கறிகள் மென்மையாகவும், விரைவாகவும் சமைக்கப்படுகின்றன.

இந்த காய்கறிகளை சமைக்க பிரஷர் குக்கரைப் பயன்படுத்தினால், அதிகமாகச் சமைத்து, அவற்றின் துடிப்பான நிறங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும்.

இந்த காய்கறிகள் வேகவைத்தல் அல்லது ஸ்டீர் ஃபிரை போன்ற வேகமான முறைகளைப் பயன்படுத்தி சிறப்பாக சமைக்கப்படுகின்றன, இது அவற்றின் கிரிஸ்பினெஸ், ஊட்டச்சத்துக்கள் மற்றும் இயற்கை சுவைகளைத் தக்கவைக்க உதவுகிறது.

கீரைகளுக்கும் இதுதான். அவற்றின் ஊட்டச்சத்து தக்கவைக்க, கீரைகளை வேகவைத்தல் அல்லது வதக்குதல் போன்ற மென்மையான முறைகளைப் பயன்படுத்தி சமைப்பது சிறந்தது, என்று டாக்டர் ஷ்ரதா கூறினார்.

பால் பொருட்கள்

டாக்டர் ஷ்ரதாவின் கூற்றுப்படி, அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலைக்கு வெளிப்படும் போது, ​​பால் அல்லது கிரீம் போன்ற பால் பொருட்கள் திரிந்துவிடும், இது உங்கள் உணவுகளில் விரும்பத்தகாத அமைப்புகளையும் சுவைகளையும் ஏற்படுத்தும்.

பிரஷர்-குக்கரில் சமைத்து முடித்ததும் பால் பொருட்களைச் சேர்ப்பது நல்லது.

உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு கிரீமி சூப் செய்கிறீர்கள் என்றால், பால் அல்லது கிரீம் மற்றும் பிற பால் பொருட்களை பிரெஷர் வெளியானவுடன் சேர்க்கவும், இதன்மூலம் சுவை மற்றும் கன்சிஸ்டன்ஸியில் விரும்பத்தகாத மாற்றங்களைத் தவிர்க்கவும்.

முட்டைகள்

பிரஷர் குக்கரில் முழு முட்டைகளை அப்படியே சமைப்பது ஆபத்தானது, என்று டாக்டர் ஷ்ரதா அறிவுறுத்தினார். முட்டைகளுக்குள் சிக்கியுள்ள நீராவி, அவற்றை வெடிக்கச் செய்யலாம், இது உணவில் குழப்பம் மற்றும் தீக்காயங்களுக்கு வழிவகுக்கும். முழு முட்டைகளையும் பிரஷர் குக்கரில் சமைப்பதை தவிர்ப்பது முக்கியம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment