சமையலறையில் நேரத்தை செலவிடும் அனைவருக்கும் எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருக்காது. சில நாட்கள் சிறப்பாக இருந்தாலும், பல நாட்கள் மோசமாகி விடுகின்றன. நீங்கள் ஒரு சமையல் கலைஞராக இருந்தாலும் சரி அல்லது புதிதாக சமைப்பவராக இருந்தாலும் சரி, உங்கள் நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்த சில எளிய வழிகள் உள்ளன. இது நிச்சயமாக சமையலை ஒரு மென்மையான அனுபவமாக மாற்றும்.
Advertisment
உப்பு இல்லாத உணவு ருசிக்காது, ஆனால் சில நேரங்களில் உணவில் தவறுதலாக அதிக உப்பைச் சேர்த்துவிட்டு, இப்போது என்ன செய்வது என்று யோசித்த நேரங்கள் இருக்கலாம்.
இந்த சங்கடத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், உங்கள் உணவில் உள்ள அதிகப்படியான உப்பைச் சமப்படுத்த உதவும் சில எளிய தீர்வுகள் இங்கே உள்ளன.
Advertisment
Advertisements
*கறியில் 1-2 டேபிள் ஸ்பூன் தயிர் அல்லது மலாய் சேர்த்தால், அது கூடுதல் உப்பைக் குறைக்கும்.
*கறி அல்லது குழம்பில் கூடுதல் காய்கறிகளைச் சேர்ப்பது நல்லது. எல்லாம் நன்றாக சேரும் வரை சமைக்கவும். இதைச் செய்வதன் மூலம் உப்பு முழு உணவிற்கும் சமமாக பரவுகிறது.
உங்கள் உணவில் அதிக உப்பு இருந்தால், சிறிது தேங்காய் பாலை சேர்க்கவும். இது மற்ற சுவைகளைத் தொந்தரவு செய்யாமல், உணவின் உப்புச் சுவையை நடுநிலையாக்க உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“