உப்பு இல்லாத உணவு ருசிக்காது, அதேபோல, அதிகப்படியான உப்பு, உணவை சுவையற்றதாக ஆக்குகிறது. இது ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம் என்பதால் இது ஆரோக்கியமற்றதாகவும் கருதப்படுகிறது.
ஆனால் சில நேரங்களில் உணவில் தவறுதலாக அதிக உப்பைச் சேர்த்துவிட்டு, இப்போது என்ன செய்வது என்று யோசித்த நேரங்கள் இருக்கலாம்.
இந்த சங்கடத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், உங்கள் உணவில் உள்ள அதிகப்படியான உப்பைச் சமப்படுத்த உதவும் சில எளிய தீர்வுகள் இங்கே உள்ளன.
தண்ணீர்
உங்கள் கிரேவியில் அதிக உப்பு உள்ளதா? அதை நடுநிலையாக்குவதற்கான சிறந்த வழி, கிரேவியில் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க வைப்பதாகும். ஆனால் நீங்கள் சேர்க்கும் தண்ணீரின் அளவைக் கவனிக்கவும்.
மாவு
சிறிய மாவு உருண்டைகளை உருட்டி, அதிகப்படியான உப்பு இருக்கும் கறியில் சேர்க்கவும். நீங்கள் அதை சுமார் 10-15 நிமிடங்கள் வைத்திருந்தால், மாவு உருண்டைகள்’ டிஷிலிருந்து அதிகப்படியான உப்பை ஊறிஞ்சிவிடும். இருப்பினும், பரிமாறும் முன் அவற்றை வெளியே எடுக்க மறக்காதீர்கள்.
தயிர்

கறியில் 1-2 டேபிள் ஸ்பூன் தயிர் அல்லது மலாய் சேர்த்தால், அது கூடுதல் உப்பைக் குறைக்கும்.
கூடுதல் காய்கறி
கறி அல்லது குழம்பில் கூடுதல் காய்கறிகளைச் சேர்ப்பது நல்லது. எல்லாம் நன்றாக சேரும் வரை சமைக்கவும். இதைச் செய்வதன் மூலம் உப்பு முழு உணவிற்கும் சமமாக பரவுகிறது.
தேங்காய் பால்
உங்கள் உணவில் அதிக உப்பு இருந்தால், சிறிது தேங்காய் பாலை சேர்க்கவும். இது மற்ற சுவைகளைத் தொந்தரவு செய்யாமல், உணவின் உப்புச் சுவையை நடுநிலையாக்க உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“