சமைப்பதை ரசிக்காதவர்களுக்கு, சமையல் என்பது ஒரு சுமையாக இருக்கலாம்- குறிப்பாக, காய்கறி நறுக்குதல், தோலுரித்தல் மற்றும் சுத்தம் செய்தல் போன்றவை, ஆனால், சில ஹேக்குகள் இந்த சமையல் செயல்முறையை மி கவும் சுலபமாக மாற்றும்.
இன்ஸ்டாகிராமில் இந்தச் சிக்கல்கள் அனைத்தையும் தீர்க்கும் ஒரு ரீலைப் பார்த்தோம்.
ஆனால் இதை நம்புவது கடினம் என்பதால், இந்த ஹேக்ஸ் செயல்படுகிறதா என்பதைப் புரிந்து கொள்ள நாங்கள் செஃப் வைபவ் பார்கவாவிடம் பேசினோம்.
தக்காளியை தலைகீழாக சேமித்து வைப்பதன் மூலம் அவற்றின் ஆயுளை சிறிது நீட்டிக்க முடியும் என்று பார்கவா கூறுகிறார், ஆனால் அவை பழுத்திருந்தால், சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் அவற்றைப் பழுக்க வைக்க விரும்பினால், அதை ஃபிரிட்ஜின் கதவுக்கு அருகில் உள்ள மேல் அலமாரியில் வைக்க வேண்டும், ஏனெனில் அந்த இடம் கொஞ்சம் சூடாக இருக்கிறது.
முட்டை வேகவைக்கும்போது ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவைச் சேர்க்கலாம், பேக்கிங் சோடாவில் உள்ள காரமானது முட்டையின் வெள்ளைக்கருவை தளர்த்த உதவுகிறது, எனவே ஓடு உரிக்கும்போது மிகவும் எளிதாக வரும், என்று பார்கவா விளக்குகிறார்.
முட்டை உடைக்கும் போது ஓடும் சேர்ந்து முட்டையில் விழுந்து விட்டதா? உங்கள் விரல்களை சிறிது நனைத்து, எடுக்கும்போது ஓடு உடனே உங்கள் கைகளின் மீது ஒட்டிக்கொள்ளும்.
தங்கள் கட்டிங் போர்டு சறுக்குவதால், போர்டின் கீழே ஈரமான காகிதம் அல்லது ஈரமான துணியை வைத்திருப்பது, உண்மையில் வேலை செய்கிறது.
மூலிகைகளைப் பொறுத்தவரை, பார்கவா அவற்றை தண்ணீரில் வைக்க பரிந்துரைக்கிறார், ஏனெனில் அவை 2-3 நாட்களுக்கு புதியதாக இருக்கும். நீங்கள் அவற்றை ஈரமான துணியில் போர்த்தலாம், மேலும் ஃபிரிட்ஜில், அவை 5-6 நாட்களுக்கு புதியதாக இருக்கும்.
பார்கவா இன்னும் சில ஹேக்குகளை பகிர்ந்து கொண்டார்.
1. சாதம் அல்லது ஏதேனும் கறி சமைக்கும் போது தண்ணீர் அதிகமாகிவிட்டால், ரொட்டியை அதில் சேர்க்கவும், அது அதிகப்படியான தண்ணீரை உறிஞ்சிவிடும்.
2. அதிகம் புளித்த தயிரை சேமிக்க, அதில் புதிய தேங்காய் துண்டுகளை அரை மணி நேரம் வைக்கவும். துர்நாற்றமும் புளிப்பும் மறைந்துவிடும்.
3. கரப்பான் பூச்சி பிரச்சனை இருந்தால், அவற்றை போக்க சமையலறையின் மூலையில் சிறிது போரிக் பவுடரை வைக்கவும்.
4. உங்கள் மிக்சியில் இருந்து இஞ்சி-பூண்டு விழுதின் வாசனையை நீக்க, மிக்ஸி ஜாரில் உப்புத் தண்ணீரைச் சேர்த்து, அதை அரைக்கவும். வாசனை தானாகவே போய்விடும்.
5. உங்கள் மாவை புதியதாகவும், மென்மையாகவும் வைத்திருக்க, எப்போதும் அதில் சிறிது நெய் சேர்க்கவும். அதன் பிறகு, நீங்கள் அதை ஃபிரிட்ஜில் சேமிக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.