தூய்மை என்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மேலும் சமையலறை மற்றும் உணவுகள் பற்றி பேசும்போது, பொருட்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது இன்னும் முக்கியமானது. ஆனால், சில சமயங்களில் இந்த சுகாதாரம் ஆபத்தானதாகவும் இருக்கலாம்.
ஏன் என்று யோசிக்கிறீர்களா? நாம் அனைவரும் சமைப்பதற்கு முன்பு காய்கறிகளை கழுவுவது ஆரோக்கியமான சமையலறை நடைமுறையாகும், ஆனால், சாப்பிடுவதற்கு முன்பு முட்டைகளைக் கழுவுவது ஆரோக்கியமானதல்ல..

யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் அக்ரிகல்ச்சர் (USDA) படி, வணிகரீதியாக உற்பத்தி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் கழுவி கோட்டிங் செய்ய வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன. நீங்கள் அதை மீண்டும் வீட்டில் கழுவும்போது, முட்டையின் மேற்பரப்பில் இருந்து ‘க்யூட்டிகல்’ அல்லது ‘ப்ளூம்’ எனப்படும் இயற்கையான பாதுகாப்பு பூச்சு அகற்றப்படும்.
என்ன நடக்கிறது?
யுஎஸ்டிஏ படி, கோழிப்பண்ணையில் வணிக முட்டைகளை கழுவியவுடன், மினரல் எண்ணெயில் ஒரு படலம் (edible mineral oil) பூசப்படுகிறது, இதனால் எந்த பாக்டீரியாவும் முட்டைகளை மாசுபடுத்தாது அல்லது ஊடுருவிச் செல்லாது.
நிபுணர்களின் கூற்றுப்படி, முட்டைகளை குளிர்ந்த அல்லது ஓடும் நீரின் கீழ் கழுவுவது, முட்டையின் உள்ளே பாக்டீரியாவைத் தள்ளக்கூடும், இது முட்டையை நுகர்வுக்கு தகுதியற்றதாக மாறும்.
எனவே முட்டைகள் ஏற்கனவே கழுவப்பட்டு விட்டது என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். அதனால் நீங்கள் கழுவுவதை தவிர்த்துவிட்டு சமையல் மீது கவனம் செலுத்தலாம்.
பண்ணை, புதிய முட்டைகள் கழுவப்பட வேண்டும், அதுவும் வெதுவெதுப்பான நீரில் மட்டுமே.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“