முட்டைகள் புரதத்தின் சிறந்த மூலமாகும். நீங்கள் அடிக்கடி வேகவைத்த முட்டைகளை சாப்பிடுபவரா? அப்படியானால் முட்டைகளை சரியாக வேக வைப்பதும், அதிலிருந்து ஓட்டை உரிப்பதும் எவ்வளவு கடினமான வேலை என்று உங்களுக்கு தெரியும்.
முட்டைகளை உரிக்கும்போது கைகள் சூடாமல் இருக்க முதலில் குளிர்ந்த நீரில் அவற்றை வைக்க வேண்டும். சில நேரங்களில் முட்டை சரியாக வேகவில்லை என்றால், ஓட்டுடன் ஓட்டிக் கொண்டு தொல்லை செய்யும்.
இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க, உங்களுக்கான சரியான தந்திரம் எங்களிடம் உள்ளது, இது ஒவ்வொரு முறையும் முட்டைகளை சரியாக வேகவைத்து உரிப்பதை உறுதி செய்யும்.
நன்கு வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவைச் சுற்றி பச்சை வளையம் இருக்காது என்பதையும், அதன் உட்புறம் கிரீமி மற்றும் மென்மையாக இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
முட்டையை எளிதாக வேகவைப்பது எப்படி?
கபிதாஸ் கிச்சன் புகழ் கபிதா சிங் ஒரு டீஸ்பூன் எண்ணெயை தண்ணீரில் சேர்த்து, பின்னர் 10 நிமிடங்களுக்கு மேல் முட்டைகளை வேகவைக்க கூடாது என பரிந்துரைக்கிறார். இது அவற்றில் விரிசல்களைத் தடுக்க உதவுகிறது.
தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து முட்டைகளை வேக வைப்பது மற்றொரு பிரபலமான முறை. இது விரிசல் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.
முட்டைகளை உரிப்பது எப்படி?
கபிதா கூற்றுப்படி, முட்டைகளை வேகவைத்து குளிர்ந்த பிறகு மெதுவாக உடைப்பது எளிதாக உரிக்க உதவுகிறது.
மற்றொரு வழி, அவற்றை மெதுவாக உடைத்து, பின்னர் உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்க்க வேண்டும்.
உதவிக்குறிப்பு: ஒரு வாரம் ஃபிரிட்ஜில் வைத்த முட்டைகள், புதிய முட்டைகளுடன் ஒப்பிடும்போது ஓடு உரிக்க எளிதாக இருக்கும்.
இதையும் நோட் பண்ணுங்க:
முட்டைகள் கெட்டு விட்டதா என்பதை கண்டுபிடிக்க, அவற்றை ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீரில் வைக்கவும். முட்டைகள் பாத்திரத்தில் கீழே தங்கினால் அவை புதியவை. அவை நின்றால், முட்டைகள் 2-3 வாரங்கள் பழமையானவை, ஆனால் அவை மிதந்தால், முட்டைகள் மிகவும் பழையவை என்று அர்த்தம்; அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“