சமையல் என்பது பொதுவாக பலருக்கும் பிடிக்காத ஒன்று. எனவே, சமையலறையில் அதிக நேரம் செலவழிக்காமல் முடிந்தவரை சீக்கிரம் சமைக்கவும், சமையல் தொந்தரவு இல்லாததாகவும் இருக்க பலர் விரும்புகிறார்கள். இருப்பினும், சமைப்பது என்பது காய்கறிகளை வெட்டுவது மற்றும் உணவு தயாரிப்பது மட்டுமல்ல, அது அதையும் தாண்டி, பொருட்கள் மற்றும் உணவை புதியதாக வைத்திருப்பதையும் உள்ளடக்கியது.
எனவே, மாஸ்டர் செஃப் பங்கஜ் பதூரியாவின் பின்வரும் குறிப்புகள் நிச்சயமாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பாஸ்தா சமைக்க

பாஸ்தா வேக வைக்கும் போது கொஞ்சம் எண்ணெய் மற்றும் நிறைய உப்பு சேர்க்கவும். பாஸ்தாவை அதிகமாக சமைக்காதீர்கள்; உண்மையில், அது கொஞ்சம் வேகாமல் இருந்தால் தான் உறுதியாக இருக்கும், சமைத்த பிறகு, அதில் குளிர்ந்த நீரை ஊற்றவும். எனவே நீங்கள் அதை சாஸில் சேர்க்கும்போது பாஸ்தா சொதசொதப்பாக ஆகாமல் இருக்கும்.
சுவையான பருப்பு
இன்னும் சுவையாக இருக்க, பருப்பை சிறிது வறுத்த பிறகு சமைக்கவும்
கேக்கை புதிதாக வைத்திருக்க

நீண்ட காலத்திற்கு கேக்குகளை புதியதாக வைத்திருக்க, வெட்டிய கேக் துண்டுகளை, இரண்டு பிரட் துண்டுகளால் மூடி, மூடிய பாத்திரத்தில் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
கிரீம் சேர்க்காமல் திக்கான கிரேவி

நீங்கள் க்ரீம் சேர்க்க விரும்பவில்லை என்றால் அல்லது க்ரீம் தீர்ந்துவிட்டால், உங்கள் கிரேவி கெட்டியாகவும் கிரீமியாகவும் இருக்க, இந்த உதவிக்குறிப்பைப் பின்பற்றவும். சமைத்த வெங்காயம், தக்காளியை பேஸ்டாக அரைத்து குழம்பில் சேர்க்கவும். இது க்ரீம் சேர்க்காமலேயே கிரேவிக்கு திக்னெஸ் மற்றும் க்ரீமையும் கொடுக்கும்.
வெற்றிலை புதிதாக இருக்க
வெற்றிலை ஃபிரிட்ஜில் வைத்தால் சீக்கிரமே கருத்துவிடும், நீங்கள் வெற்றிலை நீண்ட காலம் புதியதாக இருக்க விரும்பினால், அதை ஈரமான துணியில் சுற்றி ஃபிரிட்ஜில் வைக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“