Advertisment

ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்ததும் கொரோனா வைரஸ்.. சித்த மருத்துவர் விளக்கம்

தற்போது நடக்கும் ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கையில், கொரோனா ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

author-image
WebDesk
Oct 20, 2022 13:08 IST
Is there a difference between male and female sperms?

ஒரு ஆணின் விந்து பை தன் வாழ்நாளில் 12 லட்சம் கோடி விந்தணுக்களை உற்பத்தி செய்யும்.

கொரோனா வைரஸ் மனிதனின் சுவாசப் பாதையை பாதிக்கும் நோயாக மட்டுமே ஆரம்பத்தில் அறியப்பட்ட நிலையில், இந்த வைரஸ் உடலின் பல பாகங்களை சேதப்படுத்துவது அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி வருகிறது. 

Advertisment

அந்த வகையில், கொரோனா வைரஸ் ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்தும் என கடந்த ஓராண்டாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. தற்போது நடக்கும் ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கையில், கொரோனா ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

கொரோனா குறுகிய காலத்திற்கு மட்டுமே விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கை, அளவு மற்றும் இயக்கம் ஆகியவற்றில் 50 சதவீதம் பாதிப்புகள் இருப்பதாக சித்த மருத்துவ ஆய்வு முடிவு கூறுகிறது. 

கொரோனாவில் இருந்து குணமடைந்த ஆண்களில் 10-20 சதவீதம் பேர் டெஸ்டிகுலர் வலியை அனுபவித்து இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், பெரும்பாலானோருக்கு விந்துகளில் வெள்ளை ரத்த அணுக்கள் அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. விதைப்பையில் வலி, வீக்கம், கட்டிகள் போன்ற நோய்களையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்துகிறது.

publive-image

கொரோனா வைரஸ், ஆண்களின் விந்தணுக்களின் செயல்பாட்டை சேதப்படுத்தும்

கொரோனா வைரஸ் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடும் என்பதற்கான நேரடி ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளது.

இது ஆண் உறுப்பு எழுச்சிக்கு  உதவும் cavernosal muscle இல் சிதைவை உண்டு செய்கிறது. மேலும் சிறிய நிலையில் விந்து பையில் ரத்த உறைவை உண்டு செய்வதால் ஆண் உறுப்பு எழுச்சி குறைபாடுகள்  நீடிக்கிறது.

கொரோனாவில், இருந்து மீண்டவர்கள் விரைவில் தங்கள் விந்தணுக்கள் எண்ணிக்கை குறித்து உடனடியாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மிகக்குறிப்பாக நீரிழிவு, cholesterol,  உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்பில்  உள்ளவர்கள் கண்டிப்பாக பரிசோதனை செய்வது அவசியம்.

கொரோனா வைரஸ், ஆண்களின் விந்தணுக்களின் செயல்பாட்டை சேதப்படுத்தும். விந்தணுக்களின் உற்பத்தி அல்லது பாலியல் ஹார்மோன்களின் உருவாக்கத்தை பாதிக்கும். இதற்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தங்கள் ஆகியவையும் காரணங்களாகும்.

இது பாதிக்கப்படும் நபரின் நோய் எதிர்ப்பு சக்தி, எடை பிரச்சினைகள், உணவு, அடிப்படை சுகாதார நிலைகள் போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்தது. விந்தணுக்களின் தாக்கமும் நோய்த்தொற்றின் தீவிரத்தை பொறுத்தது. நபரின் தொற்று அதிகமாகவோ அல்லது மிதமாகவோ இருந்தால் அது தற்காலிக ஆண்மைக் குறைவுக்கு வழிவகுக்கும்.

பொதுவாக, வைரஸ் காய்ச்சல்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். ஆனால், பாதித்தவர் மீண்டும் ஆரோக்கியமாகி விட்டால், சில வாரங்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை பெருகும். ஆனால், கொரோனாவால் இழந்த ஆண்மையை மீட்க எவ்வளவு காலமாகும் என்பது இன்னும் உறுதிப்படுத்த படவில்லை.

தகவல் உதவி: மருத்துவர் முத்துக்குமார், சித்த மருத்துவ ஆராய்ச்சி நிபுணர், வாட்ஸ் அப் தொடர்பு எண் 9344186480 .

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment