Advertisment

உங்களின் தினசரி பழக்க, வழக்கங்களை தொழில்நுட்பம் மாற்றியிருக்கிறதா?

ஸ்மார்ட்போன் பழக்கத்துக்கு அடிமையாதல் என்பது உங்கள் தினசரி வேலைகளை பறிகொடுக்கும் வழிக்கு கொண்டு வரலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, technology and health, lockdown, health, binge-watching, indian express, indian express news

corona virus, technology and health, lockdown, health, binge-watching, indian express, indian express news

தொழில்நுட்பம் எப்படியெல்லாம் உங்களை பாதிக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்

Advertisment

அதீதமாக மின்னணு சாதனங்களை உபயோகப்படுத்தும் குழந்தைகள் எவ்வாறு ஊக்கக் குறைவுக்கு ஆளாகிறார்களோ, பெரியவர்களும் தங்களைத் தாங்களே ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

அளவுக்கு மீறினால் எதுவும் நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது. ஒரு அட்டவணை தயாரித்து அதற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்ற முக்கியத்துவத்தை ஊரடங்கு காலம் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றது. ஏதேனும் ஒன்றை மட்டும் பின்பற்றாமல், அதற்கு பதில் தொழில்நுட்பத்தையே அதிகம் சார்ந்திருந்தால், அது உங்களுக்கு கேடு விளைவிப்பதாக இருக்கலாம். அது எப்படி என்று பார்க்கலாம்.

தொடக்கத்தில் இருப்பவர்களுக்கு, மக்களுக்கு இப்போது அதிக நேரம் கையில் இருக்கிறது. வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருப்பதன் மூலம் அவர்களால் நேரத்தை சேமிக்க முடிகிறது. வெளித்தோற்றத்துக்கு தீங்கற்றது போல தொடங்குகிறது, ஆனால், பலர் அதற்கு அடிமையாகி விடுவதும் உண்டு. தினசரி வாழ்க்கையில் அரைபடுவதற்கும், மீண்டும் வேலை, வேலை என்று விரைவதற்கும் முன்பாக இன்னும் நேரம் இருக்கிறது. பலர் வெறுமனை படுக்கையில் படுத்தபடி, நாள் முழுவதும் அளவுக்கு மீறி திரைப்படங்களையும், வெப் ஷோக்களையும் பார்த்தபடி இருக்கின்றனர். ஏன் இது மோசமான விஷயமாகிறது? எழுந்து கொள்வது, சுற்றிக் கொண்டே இருப்பது என்பது உடல் நலத்துக்கும், கட்டுக்கோப்புடன் இருப்பதற்கும் ஏற்றது என்று போதுமான அளவுக்கு வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. சுறுசுறுப்பாக இயங்குவது உங்கள் தசைகளை இயங்கச் செய்கிறது. குறிப்பாக பின் முதுகு, கழுத்து வலி உள்ளிட்ட எந்த ஒரு அல்லது அனைத்து விதமான வலிகளில் இருந்து பாதுகாக்கிறது. இப்போது நீங்கள் அனைத்து நாட்களும், ஒவ்வொரு நாளும் ஒரே இடத்தில் இருக்கும் பட்சத்தில், நீங்கள் உங்கள் உடலுக்கு பெரும் தீங்கு செய்கின்றீர்கள்.

publive-image

அடுத்ததாக, தொழில்நுட்பம் என்பது நல்ல விஷயம் என்று நினைத்து, உலகத்தை சுற்றி என்னவேண்டுமானாலும் நடக்கட்டும் என்று தொழில்நுட்பத்தின் அருகிலேயே இருக்க நினைக்கிறீர்கள். பின்னர் ஒரு எச்சரிக்கையை பகிர்ந்து கொள்வோம். ஆம் எனில், வெள்ளமென பாய்ந்து வரும் தகவல்கள் உங்கள் மனநலத்தை பாதிக்கும் வகையில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வது உதவியாக இருக்கும். கட்டுக்கதைகளில் இருந்து உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நமது வாழ்க்கையில் தொழில்நுட்பம் ஊடுருவி உள்ளது. நாம் பெரும் எண்ணிக்கையிலான தகவல்களைப் பெறுகின்றோம். அதில் சில நம்மை தவறாக வழிநடத்தும். இந்த ஊரடங்கு காலகட்டத்தின் போது குறிப்பாக பலவீனமான மனநிலையில் இருப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு மன அழுத்தத்தை தருவது மட்டுமின்றி, கூடுதலாக பீதியையும் அளிக்கும். எப்போது தொழில்நுட்பத்தை நாட வேண்டும், எப்போது அதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இது உதவும்.

எப்போது அதீதமாக மாறுகிறது?

ஒவ்வொருவருக்கும் ஓய்வு நேரம் என்பது தேவையான ஒன்று. குறிப்பாக வீட்டில் இருந்தபடியே பலமணி நேரம் வேலை செய்பவர்களுக்கு , மன மாறுதல் என்பது அவசியம் தேவையானதாகும். ஆனால், திரையையே பார்த்துக் கொண்டிருத்தல் எப்போது உடல்நலக்குறைவாக மாறுகிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? வேலை செய்து முடித்தபோதும், பலர் அதிகாலை நேரம் வரை, எதையும் பொருட்படுத்தாமல், சமூக வலைதளத்தை அடுத்தடுத்து தொடர்ந்து பார்ப்பதபடியே இருப்பார்கள். இது பழக்கத்துக்கு அடிமையாதலின் முதல் அறிகுறியாகும். அதற்குபதில் அவர்கள் இந்த நேரத்தில் கொஞ்சம் தூங்கலாம். ஆகையால் படுக்கைக்குப் போகும் போது, தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மொபைல் போனை தூரத்தில் வைத்திருக்க வண்டும்.

ஸ்மார்ட்போன் பழக்கத்துக்கு அடிமையாதல் என்பது உங்கள் தினசரி வேலைகளை பறிகொடுக்கும் வழிக்கு கொண்டு வரலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. உங்களுடைய முன்னுரிமை வழிகளில் கூட இது வர முடியும். நீங்கள் ஒரு வேளை வீட்டு வேலைகளை அல்லது ஒரு அலுவலக வேலையை முடிகும்பட்சத்தில், அடுத்து உங்களுடைய மொபைல் போனை நோக்கி நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள். அதற்கு பதில், டிஜிட்டல் போதையை தவிர்க்கவும்.

உடல் ஆரோக்கியம்

அதிக அளவு மொபைல் போன் உபயோகிப்பது உங்கள் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும். உங்கள் கண்களுக்கு அழுத்தம் தரும். எரிச்சல், நமைச்சல் தரும். இது தீவிரமாகும்போது கண்களுக்கு கூட நிரந்தமான பாதிப்பை ஏற்படுத்தும். அதீதமாக மின்னணு சாதனங்களை உபயோகப்படுத்தும் குழந்தைகள் எவ்வாறு ஊக்கக் குறைவுக்கு ஆளாகிறார்களோ, பெரியவர்களும் தங்களைத் தாங்களே ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதற்கு பதில் நீங்கள் பழைய பழக்க வழக்கங்களை கடைபிடிக்கலாம். உங்களுடைய ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் படிக்கலாம். எளிமையான முறையில் நடைபயிற்சி மேற்க்கொள்ளலாம் அல்லது சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Lockdown
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment