உங்களுக்கு ஏற்படும் நீர்சத்து குறைபாட்டைப் போக்குவதற்கு, எலுமிச்சை, நெல்லிக்காய் ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட பானங்கள் அல்லது சில பழங்களை உட்கொள்ளலாம் என்று ஊட்டசத்து நிபுணர் ருஜூதா திவேகர் கூறுகிறார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், புகழ்பெற்ற ஊட்டசத்து நிபுணர் ருஜூதா திவேகர், உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், மன அழுத்தம்,பீதி ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருப்பதை உறுதி செய்யும் வகையிலான ஒரு உணவு த்திட்டத்தை வரைவு செய்திருக்கிறார்.
“கொரோனா வைரஸ் என்ற தொடர் சங்கிலியில் இருந்து விடுபடுவதற்காக நாம் பணியாற்றும்போது, இந்திய உணவு சங்கிலியுடன் மீண்டும் இணைந்திருப்போம். ஊரடங்கு என்பதை, உள்நாட்டு உணவுடன் நாம் மீண்டும் தொடர்பை உருவாக்குவதற்கான வாய்ப்பாகத்தான் இதனை நான் பார்க்கின்றேன். இந்திய உணவுகள் தரும் ஊட்டசத்துகளுடன், இந்த உணவு வகைகளை சோதித்துப் பார்க்கும் காலமாக , குழந்தைப் பருவத்தின் நினைவுகளாக, அவை செயல்படுகின்றன,” என்று தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவேகர் குறிப்பிட்டிருக்கிறார்.
உணவுத் திட்டங்களைப் பார்க்கலாம்.
⦁ வாழைப்பழங்கள்(அஜீரணகோளாறைத் தடுக்க) ஊற வைக்கப்பட்ட பாதம் பருப்பு(சர்க்கரை நோய், இதயநோயைத் தடுக்கக் கூடியது), ஊறவைக்கப்பட்ட திராட்சை(மாதவிடாய் கோளாறுகள், தைராய்டு சிக்கல்களை தவிர்க்க) ஆகியவற்றுடன் உங்களுடைய தினத்தினை தொடங்குங்கள்.
⦁ காலை உணவு ; இந்திய உணவுகளான இட்லி, அவல், தோசை, பராத்தா, மூட்டைகள், பாவ் ஆகிய இந்திய பாரம்பர்ய மிக்க உணவு வகைகளை நீங்கள் உண்ணலாம். இவை உங்கள் சர்க்கரை சத்தின் அளவை கட்டுக்குள் வைக்கும். வறுக்கப்பட்ட உணவுகள் மீது தீராத ஆசை கொண்டிருந்தால், பூரி அல்லது வடை ஆகியவற்றை வாரத்தில் ஒருமுறை மட்டும் சாப்பிடலாம். மாம்பழம் உள்ளிட்ட பருவகாலப்பழங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
⦁ முற்பகல் நொற்றுக்குத் தீனி; உங்களுக்கு ஏற்படும் நீர்சத்து குறைபாட்டைப் போக்குவதற்கு, எலுமிச்சை, நெல்லிக்காய் ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட பானங்கள் அல்லது சில பழங்களை உட்கொள்ளலாம்.
⦁ மதிய உணவு ; நுண்ணூட்ட சத்துகளான பி12, வைட்டமின் டி குறைபாடுகள் இருந்தால், பருப்பு மற்றும் அரிசிசாதம் அல்லது ரொட்டி,சப்ஜி மற்றும் சட்னியுடன் சாப்பிடலாம். ரொம்ப அதிகமாக சாப்பிடக்கூடாது என்று உணர்ந்தால் வாழைப்பழம், சர்க்கரை, பால் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்பட்ட ஷிக்ரான் போளி, சப்பாத்தி ஆகியவற்றை சாப்பிடலாம்.
⦁ பிற்பகல் நொற்றுக்குத்தீனி; உலர்ந்த தேங்காய் மற்றும் வெல்லம் அல்லது முந்திரி மற்றும் வெல்லம் ஆகியவற்றை உண்ணலாம். முறுக்கு, சீடை, தட்டை போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை சாப்பிடலாம். இவை மனதுக்கு ஊக்கம் ஊட்டுபவை மட்டுமின்றி, உடலுக்குத் தேவையான கொழுப்பு சத்து, தாதுக்கள் நிறைந்த பொருட்களாகும்.
⦁ இரவு உணவு; கிச்சடி அல்லது அரிசிசாத த்துடன் பருப்பு அல்லது பயறுவகை அல்லது முட்டை அல்லது பன்னீர் ஆகியவற்றை உட்கொள்ளலாம். இவை ஆரோக்கியமான ஒன்றாகும். அரிசி சாத த்துடன் பயறு வகைகள் உட்கொள்வது என்பது நார்சத்து, உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் கிடைக்கும்.
⦁ படுக்கைக்குப் போகும் முன்பு; மஞ்சள் தூள் கலந்த பால் அருந்தினால், உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். உங்களுக்கு தூக்கக் குறைபாடு அல்லது அஜீரணகோளாறு இருந்தால் ஜாதிக்காயை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். பலவீனமான எலும்பு, மூட்டு வலி இருந்தால் உலர்ந்த இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம். தோல் மற்றும் முடி வளர்ச்சிக்கு கேசர் சேர்த்துக் கொள்ளலாம்.
ருஜூதா திவேகர், யோகா பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார், வீட்டில் இருக்கும்போது உங்களை ஆற்றலுடனும், கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில பயிற்சிகளை பரிந்துரைக்கிறார். இந்த பயிற்சிகளை தினமும் 30 நிமிடங்கள் செய்ய வேண்டும். சூரியநமஸ்காரத்துடன் தொடங்கி, யோகாசனங்கள் செய்ய வேண்டும்.
சில வாழ்க்கை முறை மாற்றங்களையும் அவர் பரிந்துரைக்கிறார்.
⦁ மதிய உணவுக்குப் பின்னர் உறக்கம் என்பது 30 நிமிடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது.
⦁ கம்ப்யூட்டர், டிவி, மொபைல் திரைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தை குறையுங்கள் மொபைல் போனை வீட்டில் குறிப்பிடத்தில் வைத்திருங்கள். அடிக்கடி பார்ப்பதை, உபயோகிப்பதை தவிருங்கள்.
⦁ உணவு உண்ணும்போது அதில் கவனம் வைத்து சாப்பிடுங்கள். கீழே உட்கார்ந்து ஒரே ஒரு உணவை சத்தமின்றி, நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
⦁ உங்கள் துணையுடன் நீங்கள் இருங்கள். நீங்கள் நினைப்பது போல இது பீதியானது அல்ல
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil