/tamil-ie/media/media_files/uploads/2022/09/indu-g.jpg)
Costume designer Indu gopirajan
ஆள்பாதி ஆடைபாதி என்பது எதுக்கு பொருந்துகிறதோ இல்லையோ, சினிமா, சீரியல் கலைஞர்களுக்கு கண்டிப்பாக பொருந்தும். எப்போதும் லைம் லைட்டில் இருப்பதால், அவர்களும் தங்களின் ஆடைத்தேர்வில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
சில நேரங்களில் சில நடிகர், நடிகைகள் உடுத்தும் ஆடை’ ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால், உடனே அதுபோன்ற மாடல் எங்குக் கிடைக்கும் என இணையத்தில் தேட ஆரம்பித்து விடுவார்கள். அப்படி தான், இப்போது பல ஃபேஷன் விரும்பிகள், இந்து கோபிராஜனை தேட ஆரம்பித்துள்ளனர்.
இந்து கோபிராஜன் யார்?
சென்னையைச் சேர்ந்த இந்து கோபிராஜன், பிரபல காஸ்ட்யூம் டிசைனர். வார்ட்ரோப் ஸ்டைலிஸ்ட் மற்றும் இல்யூஸ்ட்ரேட்டர்.
27 வயதான இந்து ஒரு மாற்றுத்திறனாளி பெண், நாற்காலி தான் அவருடைய உலகம். இருப்பினும் தனது விடாமுயற்சியால், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பிறகு, தனது தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருந்து வந்தார்.
அப்போது தான் இந்துவுக்கு ஃபேஷன் மீது மிகப்பெரிய ஆர்வம் வந்தது. அதற்காக, அவர் ஃபேஷன் டிசைனிங்கில் 2 வருட படிப்பை மேற்கொண்டார். படிப்பை முடித்த பிறகு, முதலில் தனக்காக ஆடைகளை டிசைன் செய்ய தொடங்கினார். அங்கிருந்துதான் இந்துவின் ஃபேஷன் பயணம் ஆரம்பமானது.
#NewProfilePicpic.twitter.com/XDtW0Nwj6l
— Indu Gopirajan (@Indu_IG) May 9, 2022
பெரும்பாலான ஆடை வடிவமைப்பாளர்கள் தங்கள் பிராண்டிற்காக பிரச்சாரம் செய்ய, மாடல்களைத் தான் நம்பியிருக்கிறார்கள். ஆனால், இந்து கோபிராஜன், இந்த விதிமுறைகளை மாற்றி எழுதினார், தனது சொந்த பிராண்டிற்கு தானே மாடலிங் செய்தார்.
அவரது ஆடை-வடிவமைக்கும் திறமை பலரை கவர்ந்தது. அதன் காரணமாக திரையுலகில் இருந்து சில நடிகர்களை ஸ்டைல் ​​செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. லாக்டவுனுக்கு முன், மிஸ் இந்தியா 2018 அனுக்ரீத்தி வாஸின் வடிவமைப்பில் வேலை செய்தார்.
லாக்-டவுனுக்கு பிறகுதான், அவரது வாழ்க்கையில் பெரிய திருப்பம் நிகழ்ந்தது. அதுவரை ஆடைகளை மட்டுமே வடிவமைத்த இந்து, ஃபேஷன் டிசைனிங் மீது கொண்ட காதலால், சொந்தமாக நிறுவனத்தைத் தொடங்கினார். அதில் தன்னைபோல நிறைய கனவுகளுடன் இருப்பவர்களுக்கு தன் அனுபவங்களை பகிர்ந்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றினார். ஆனால் கொரோனா காரணமாக அந்த நிறுவனத்தை இந்துவால் தொடர முடியவில்லை.
இந்து, சன் நெட்வொர்க்கின் ஆதித்யா டிவியிலும் ஃப்ரீலேன்ஸ் ஃபேஷன் ஸ்டைலிஸ்டாக உள்ளார்.
இப்படி மாற்றுத்திறனாளியாக இருந்து படிப்படியாக முன்னேறிய இந்து, இப்போது பல பிரபலங்கலளின் குறிப்பாக அப்-கமிங் ஆர்டிஸ்ட், சீரியல் ஆர்டிஸ்ட்களின் விருப்பமான ஃபேஷன் ஸ்டைலிஸ்டாக இருக்கிறார்.
பல பிரபலங்களுக்கு ஆடை வடிவமைத்து கொடுத்தாலும், விஜய் சேதுபதி மற்றும் விஜய தேவரகொண்டா இருவருக்கும் ஸ்டைலிங் செய்ய வேண்டும் என்பது இந்துவின் ஆசை.
இந்து கோபிராஜன் வடிவமைத்த சில ஆடைகள் இங்கே
/tamil-ie/media/media_files/uploads/2022/09/307551800_794115844968431_5500661736819695488_n.jpg)
விஷாகா திமன்
/tamil-ie/media/media_files/uploads/2022/09/307230623_630194948710761_8936927889167404187_n.jpg)
லாஸ்லியா
/tamil-ie/media/media_files/uploads/2022/09/306519236_432597675381045_6753415126421076608_n.jpg)
விஷாகா திமன்
/tamil-ie/media/media_files/uploads/2022/09/300997910_413979444057957_5901912282744816635_n.jpg)
கிரிஷிகா அன்பழகன்
/tamil-ie/media/media_files/uploads/2022/09/298891287_467596982046559_9119024345968786979_n.jpg)
வினுஷா தேவி
/tamil-ie/media/media_files/uploads/2022/09/295916670_2249823058529464_3682366274484296424_n.jpg)
தீபிகா வெங்கடாச்சலம்
/tamil-ie/media/media_files/uploads/2022/09/294003750_1201383744014860_961844738170142031_n.jpg)
வின்சு ரேச்சல் சாம்
/tamil-ie/media/media_files/uploads/2022/09/292721984_452941819625382_6402239939649681826_n.jpg)
மானசா செளத்ரி
/tamil-ie/media/media_files/uploads/2022/09/289770622_180578877731281_4473283183437731535_n.jpg)
அம்மு அபிராமி
/tamil-ie/media/media_files/uploads/2022/09/279391270_120199560660482_5611842926834980307_n.jpg)
மிர்னாளினி ரவி
/tamil-ie/media/media_files/uploads/2022/09/278377940_5711630045519194_4036842687903899531_n.jpg)
கண்மனி மனோகரன்
/tamil-ie/media/media_files/uploads/2022/09/277852289_1881263395414851_1923164099053567196_n.jpg)
சிபி சரண்
/tamil-ie/media/media_files/uploads/2022/09/275100489_651852065921359_1739256543544300654_n.jpg)
காவ்யா அறிவுமணி
/tamil-ie/media/media_files/uploads/2022/09/273855578_305773221616420_5368709814267605556_n.jpg)
ரோஷினி ஹரிபிரியன்
/tamil-ie/media/media_files/uploads/2022/09/250448820_1096370837769323_8705842001781479136_n.jpg)
ஐஸ்வர்யா தத்தா
/tamil-ie/media/media_files/uploads/2022/09/246905706_576059956990776_4525652594472783928_n.jpg)
கேபிரியல்லா
என்னை பொறுத்தவரைக்கும் பணம் முக்கிய கிடையாது. நம்ம பண்ற வேலை பெஸ்டா இருந்தாலே, எல்லாமே உங்களை தேடி வரும். ”உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யுங்கள். நீங்கள் நினைப்பது ஒரு நாள் நிறைவேறும்” என்கிறார் இந்த புதுமைப்பெண் இந்து.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.