கொரோனா லாக் டவுன்: உங்கள் வீட்டில் அவசியம் ஸ்டாக் செய்ய வேண்டிய உணவுகள் இவை!

லாக்டவுன் சமயத்தில் நீங்கள் உங்கள் வீடுகளில் ஸ்டாக் செய்ய வேண்டிய முக்கியமான மற்றும் ஆபத்து காலங்களில் உதவக் கூடிய உணவு மற்றும் மளிகைப் பொருள்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.

Lockdown essentials, Stock your pantry with these nutritious foods : கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு தமிழக அரசின் உத்தரவின் படி, நாளை முதல் அமலுக்கு வருகிறது. தளர்வுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதால், காய்கறி, மளிகை கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில், பலரும் ஊரடங்கு நேரத்தில் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காக கடைகளுக்கு படையெடுக்க ஆயத்தமாகி இருப்பீர்கள். இந்த சூழலில், லாக்டவுன் சமயத்தில் நீங்கள் உங்கள் வீடுகளில் ஸ்டாக் செய்ய வேண்டிய முக்கியமான மற்றும் ஆபத்து காலங்களில் உதவக் கூடிய உணவு மற்றும் மளிகைப் பொருள்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.

கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்திக் கொள்வதற்காக ஆரோக்கியமான உனவுப் பொருள்களை சாப்பிட வேண்டிய கட்டாய சூழலில் நாம் இருந்து வருகிறோம். இந்த சமயத்தில், நமது உணவில் கொழுப்புச் சத்து, நார்ச்சத்து, புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவை பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு தேவையான மளிகைப் பொருள்களை நாம் ஸ்டாக் செய்ய வேண்டும். மேலும், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் அதிகம் கிடைக்கும் காய்கறி, பழங்களையும் ஸ்டாக் செய்வது கட்டாயமாகிறது.

தானியங்கள் :

பார்லி, ராகி, அரிசி, ரவை, சேமியா, கோதுமை மாவு ஆகிய தானிய வகைப் பொருள்களையும் பருப்பு வகைகளையும் ஸ்டாக் வைத்திருக்க வேண்டும்.

பச்சிலைகள், கீரைகள் :

முருங்கை இலைகள், கீரைகள், கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், கறிவேப்பிலை ஆகியவற்றை கட்டாயமாக ஸ்டாக் வைத்திருக்க வேண்டும். இவை அனைத்தும், உடலுக்கு தேவையான நுண் ஊட்டச்சத்துகளையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் தூண்ட உதவுகிறது.

காய்கறிகள் :

வெண்டைக்காய், பாகற்காய், பீன்ஸ், கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு, பீட்ரூட், இஞ்சி ஆகியவற்றை ஸ்டாக் வைத்திருக்கலாம்.

பழங்கள் :

பலாப்பழம், வாழைப்பழம், தக்காளி, கொய்யா, மா, முலாம்பழம், பப்பாளி, தர்பூசணி, கருப்பு திராட்சை, ஸ்ட்ராபெரி, அன்னாசி, சிவப்பு செர்ரி என உங்களுக்கு கிடைக்கும் பழ வகைகளை நீங்கள் வாங்கி ஸ்டாக் வைத்திருக்கலாம்.

கொட்டைகள் மற்றும் விதைகள் :

பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி, பைன் விதைகள், பிஸ்தா, சூரியகாந்தி விதைகள், தேங்காய் ஆகியவற்றை கட்டாயம் ஸ்டாக் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ள உணவுகளை நாம் அன்றாடம் பெறுவதை நாம் உறுதி செய்யலாம்.

பால் மற்றும் பால் பொருள்கள் :

பாலை அத்தியாவசியப் பொருளாக கருதி எப்பொழுதும் கிடைக்கும் வகையில் அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், தொற்று நோய் சமயத்தில் அடிக்கடி வெளியே வராமல் இருப்பதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும். பால், தயிர், பன்னீர் ஆகியவற்றை தேவைக்கேற்ப ஸ்டாக் செய்து கொள்ளலாம்.

தளர்வுகள் இன்றி ஊரடங்கு அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. இந்த சூழலில், உங்களுக்கு தேவையான அளவு பொருள்களை மட்டுமே வாங்கி சேமியுங்கள். அளவுக்கு அதிகமாக சேமிக்காதீர்கள். உங்களை சுற்றியுள்ள ஒவ்வொருவருமே, சுகாதார இக்கட்டான சூழலில் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Covid 19 lockdown pantry stock checklist healthy foods

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com