சுத்தமான, ஆரோக்கியமான கூந்தலை நாம் அனைவரும் விரும்புகிறோம், ஆனால் நம் வாழ்வில் ஒரு கட்டத்தில் பொடுகுக்கு பயந்திருப்போம்.
பொடுகு என்பது உச்சந்தலையின் தோல் செல்களின் இயல்பான வளர்ச்சியின் விளைவாகும். இது ஒரு மருத்துவ நிலை, இதில் தோல் தெரியும் அளவுக்கு உதிர தொடங்குகிறது. பொடுகு எளிதில் நீங்காது என்பதால் அதற்கு சிகிச்சையளிப்பது கடினம்.
இருப்பினும், பொடுகு ஒரு இயற்கையான செயல்முறை என்பதால், அதை அகற்ற முடியாது, ஆனால் நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். பொடுகில் இருந்து விடுபட நீங்களே வீட்டில் சொந்தமாக செய்யக்கூடிய ஹேர் மாஸ்க் இங்கே உள்ளது.
டாண்ட்ரஃப் க்ளென்சர்

எண்ணெய் முடிக்கு இந்த டாண்ட்ரஃப் க்ளென்சரை பயன்படுத்தவும். இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில், இதை பேஸ்ட் செய்து, எலுமிச்சை சாறு பிழிந்து தலையில் தடவவும்.
அரை மணி நேரம் அப்படியே விடவும். பின்னர் ஷிகாகாய் கொண்டு தலைமுடியைக் கழுவவும். உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு மூலிகை ஷாம்பூவைப் பயன்படுத்தலாம். வாரத்திற்கு இரண்டு முறை இந்த வழக்கத்தை பின்பற்றவும்.
குறிப்பு: உங்களுக்கு பொடுகுத் தொல்லை இருந்தால், சாலிசிலிக் அமிலம், ஜிங் பராத்தியான், செலினியம் சல்பைட் அல்லது கெட்டோகனசோல் கொண்ட ஷாம்புவை வாரத்திற்கு மூன்று முறை தலையை கழுவுவதற்கு முன், 5-10 நிமிடங்களுக்கு நன்றாக முடியில் தேய்த்து பின்னர் அலசவும்.
மீண்டும் பொடுகு வராமல் இருக்க, அந்த ஷாம்பூவைக் கொண்டு வாரத்திற்கு 1-2 முறை உங்கள் தலைமுடியை கழுவுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“