Advertisment

ஹெர்பல் ஷாம்புவில் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ பொடி.. பொடுகு தொல்லைக்கு ஆயுர்வேதத் தீர்வு

வேம்பு நுண்ணுயிர் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது

author-image
abhisudha
New Update
Dandruff Ayurveda remedy

Dandruff Ayurveda remedy

பொடுகு பிடிவாதமானது. நீங்கள் எத்தனை பொருட்களைப் பயன்படுத்தினாலும், அது மீண்டும் வரும் தன்மை கொண்டது. டாக்டர் வைஷாலி சுக்லா, இன்ஸ்டாகிராமில் ஒரு பயனுள்ள ஹேக்கைப் பகிர்ந்து கொண்டார். இது பொடுகுத் தொல்லையைத் தடுக்கவும், உங்கள் உச்சந்தலையை சுத்தம் செய்யவும் உதவுகிறது.

Advertisment

அது என்ன என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் விரும்பும் மூலிகை ஷாம்புவில் ஒரு தேக்கரண்டி வேப்பம்பூ பொடியைப் போட்டு, பின்னர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

வேம்பு நுண்ணுயிர் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த ஹேக் பொடுகைத் தடுக்கவும், விலையுயர்ந்த ஷாம்பூவுக்கு அதிக பணம் செலவழிக்காமல் உங்கள் உச்சந்தலையை திறமையாக சுத்தம் செய்யவும் அற்புதமாக உதவுகிறது. ஆனால், இந்த ஹேக் பயனுள்ளதாக இருக்க ஒரு மூலிகை ஷாம்பு பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ நாள்பட்ட பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்தால், அது போகாமல் இருந்தால், ஆயுர்வேதத்தின்படி, இதற்கு ஒரு தோல் நோய் போன்ற சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இது உங்கள் உடலை உள்ளே இருந்து சுத்தம் செய்ய வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.

வேம்பு, பாகற்காய், மஞ்சள் மற்றும் வாயுவிளங்கம் போன்ற சில ஆயுர்வேத மூலிகைகள் உணவாக எடுத்துக் கொள்ளும்போது உதவுகின்றன என்று அவர் மேலும் கூறினார். (எப்போதும் ஆயுர்வேத மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் எடுக்கப்பட வேண்டும்)

வேம்பின் அதிசய நன்மைகளைப் பற்றிப் பேசுகையில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிபுணரும் ஆயுர்வேத நிபுணருமான கரிஷ்மா ஷா, வேம்பு பேஸ்ட், எலுமிச்சை சாறு, கற்றாழை ஜெல் பேஸ்ட், வெந்தய விழுது மற்றும் நெல்லிக்காய் பேஸ்ட் ஆகியவற்றைக் கொண்டு வீட்டில் ஹேர் மாஸ்க் தயாரிக்க பரிந்துரைத்தார். பொடுகு விஷயத்தில் இது அதிசயங்களைச் செய்கிறது, என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment