Advertisment

சித்தி சீரியல் கொடுத்த அடையாளம்; கெளதம் மேனனை இம்ப்ரெஸ் செய்த தருணம்! - டேனியல் பாலாஜியின் மறுமுகம்

author-image
WebDesk
Dec 12, 2019 22:45 IST
daniel balaji acted in chithi serial sun tv chithi 2 - சித்தி சீரியல் கொடுத்த அடையாளம்; கெளதம் மேனனை இம்ப்ரெஸ் செய்த தருணம்! - டேனியல் பாலாஜியின் மறுமுகம்

daniel balaji acted in chithi serial sun tv chithi 2 - சித்தி சீரியல் கொடுத்த அடையாளம்; கெளதம் மேனனை இம்ப்ரெஸ் செய்த தருணம்! - டேனியல் பாலாஜியின் மறுமுகம்

டேனியல் பாலாஜியை டெரர் வில்லனாகவே பார்த்து பழகிய நமக்கு, அவர் வாழ்க்கையில் எவ்வளவு விஷயங்களைக் கடந்து இந்த இடத்தை எட்டியிருக்கிறார் என்பது தெரியாது.

Advertisment

1975ம் ஆண்டு பெங்களூருவில் பிறந்தவர் பாலாஜி. இவரது மாமா, கன்னட திரைத்துறையின் பிரபல இயக்குனர் சித்தலிங்கையா. இவரது மகன் தான் மறைந்த நடிகர் முரளி. நம்ம அதர்வாவின் தந்தை.

சினிமா மீதிருந்த ஆர்வத்தால், சென்னைக்கு வந்த பாலாஜி, தரமணி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் டைரக்ஷன் கோர்ஸ் படித்தார். பிறகு, ராதிகா நடித்த 'சித்தி' சீரியலில் டேனியல் எனும் பாத்திரத்தில் நடித்தவர், அன்று முதல் தான் டேனியல் பாலாஜி ஆனார். அந்த சீரியல் சூப்பர் ஹிட்டாக, அடுத்ததாக அலைகள் எனும் சீரியலில் நடித்தார்.

இதன் பிறகு, விடா முயற்சியால் 2002ம் ஆண்டு, ஸ்ரீகாந்த் நடித்த 'ஏப்ரல் மாதத்தில்' எனும் திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்த டேனியல் பாலாஜி, தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் நடித்தார். பிறகு, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய காக்க காக்க படத்தில் சூர்யாவுடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

அப்படத்தின் ஷூட்டிங்கில், சூர்யாவுக்கு அடுத்தபடியாக இயக்குனர் கௌதமை அதிகம் ஈர்த்தது டேனியல் பாலாஜி தான். அவரது பார்வை, மேனரிசம், பேசும் ஸ்டைல் என்று அத்தனையிலும் ஒரு தனித்துவம் இருப்பதை கவனித்த கெளதம், கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் டெரர் வில்லன் ரோலை டேனியல் பாலாஜிக்கு நம்பி அளித்தார்.

அந்த வாய்ப்பை கெட்டியமாக பிடித்துக் கொண்ட டேனியல் பாலாஜி, ரசிகர்கள் சீரியஸாகவே திட்டும் அளவுக்கு நடிப்பில் மிரட்டியிருந்தார்.

பிறகு தனக்கென்று ஒரு பாதை அமைத்து சினிமாவில் இன்று நடைபோட்டு வருகிறார்.

தவிர, தற்போது எடுக்கப்பட்டு வரும் சித்தி 2ம் பாகத்திலும் டேனியல் பாலாஜி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment