தேங்காய் எண்ணெய் கூட… டிடி அக்கா பிரியதர்ஷினி பியூட்டி டிப்ஸ்

என்னோட சரும பராமரிப்பு என்னனா. ஒரு ரெண்டு நாள் எல்லா கிரீம் யூஸ் பண்ணேன்னா, ரெண்டு நாள் ஃபிரியா விடனும்- பிரியதர்ஷினி பியூட்டி டிப்ஸ்

என்னோட சரும பராமரிப்பு என்னனா. ஒரு ரெண்டு நாள் எல்லா கிரீம் யூஸ் பண்ணேன்னா, ரெண்டு நாள் ஃபிரியா விடனும்- பிரியதர்ஷினி பியூட்டி டிப்ஸ்

author-image
abhisudha
New Update
Priyadarshini

Priyadarshini

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி. 20 ஆண்டுகளை கடந்தும் இன்றும், தமிழகத்தின் டாப் தொகுப்பாளினியாக இருக்கிறார். இவரது அக்கா பிரியதர்ஷினி. இவரும் முன்பு பிரபல தொகுப்பாளினியாக இருந்தவர் தான். இப்போது சன் டிவியின் எதிர் நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். பிரியதர்ஷினி அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர். அவருக்கு இப்போது 44 வயது என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. இன்றும் அதே இளைமையுடனும், பொலிவுடனும் இருக்கிறார்.

Advertisment

இந்நிலையில் பிரியதர்ஷினி ஒருமுறை தன்னுடைய சரும பராமரிப்பு குறித்து, யூடியூப் வீடியோ ஒன்றில் பகிர்ந்து கொண்டார். வீடியோவில் அவர் பேசியது;

உங்க சருமத்த ரொம்ப பத்திரமா பாத்துக்கங்க. நான் அப்படிதான் பாத்துக்கிறேன். சரும பராமரிப்பு எப்போவும் நாம தூங்க போகும்போது இருந்து ஆரம்பிக்கணும். நம்ம என்னலாம் சாப்பிடலாமோ அது எல்லாமே நம்ம முகத்துக்கும் அப்ளை பண்ணலாம்.

Advertisment
Advertisements

முதல்ல உங்க சருமத்த நல்ல சுவாசிக்க விடுங்க. அதுக்கு முதல்ல முகத்தை நல்ல கழுவுங்க. நம்ம சருமத்துல என்ன அழுக்குனு இருக்குனு நமக்கே தெரியாது. அதுனால ஆயில், ஃபோம் என ரெண்டு விதமான க்ளென்சர்ல உங்களுக்கு எது செட் ஆகுதோ, அதை யூஸ் பண்ணி முகத்தை கழுவுங்க.

நைட் முகத்துல கிரீம் போடனும் அவசியமில்ல. சில நாள் முகத்துல எதுவுமே போடாம இருக்கிறது தான் சிறந்த சரும பராமரிப்பு. ஆனாலும் நீங்க விருப்பட்டா நைட் கீரிம் அப்ளை பண்ணலாம்.

அடுத்த பிரச்னை அண்டர் ஐ டார்க் சர்கிள்ஸ். ஐ கிரீம் பொறுத்தவரை கம்மியா தான் யூஸ் பண்ணனும். அப்போதான் அது வேலை செய்யும். நிறைய போடாதீங்க.

என்னோட சரும பராமரிப்பு என்னனா. ஒரு ரெண்டு நாள் எல்லா கிரீம் யூஸ் பண்ணேன்னா, ரெண்டு நாள் ஃபிரியா விடனும்.

publive-image

காலையில எழுந்ததும், அந்த நாளுக்கு முதல்ல உங்க சருமத்தை ரெடி பண்ணனும். எப்போவும் மேக்கப் போடுறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடியே மாய்ஸ்சரைசர், டோனர் அப்ளை பண்ணுங்க. ஒவ்வொரு வயசு மாறும்போது நம்ம சருமம் கூட மாறும். உங்களுக்கு 20 வயசுல இருந்த சருமம் 30 வயசுல இருக்காது.

டீன் ஏஜ்ல நிறைய முகப்பரு வரும். உங்களுக்கும் அப்படி வந்தா எதுவும் செய்யாதீங்க. அப்படியே விட்டுடுங்க. அதுவே போயிடும். காலையில வழக்கமா ஃபேஸ் வாஷ் யூஸ் பண்ணி முகம் கழுவுங்க. அப்புறம் டோனர், மாய்ஸ்சரைசர், சீரம் போடலாம்.

இதுல டோனர் நீங்க ஒரு நாள் யூஸ் பண்ணலாம், உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது. அதேபோல நிறைய சீரம் யூஸ் பண்றத விட, கம்மியா யூஸ் பண்ணும் போது நல்ல ரிசல்ட் கிடைக்கும். அதனால, கொஞ்சமா சீரம் யூஸ் பண்ணுங்க. எல்லாத்தையும் விட முக்கியம் மாய்ஸ்சரைசர்.

ஆனா இது எல்லாம் விட என்னோட சீக்ரெட் பிரொடக்ட்னா அது தேங்காய் எண்ணெய் தான். இது உங்க முகத்த இயற்கையாவே, பளபளக்கும். மேக்கப் ரிமூவராவும் யூஸ் பண்ணலாம். என்னோட ஃபவுண்டேஷன் கூட ஒரு டிராப் தேங்காய் எண்ணெய் போட்டு, அப்புறமா அப்ளை பண்ணுவேன்.

தேங்காய் எண்ணெய் கூட லாவெண்டர், ஆரஞ்சு, லமன்கிரஸ் பெப்பர்மிண்ட் ஆயில், ஜெரனியம், ஒரிகனா ஆயில் மிக்ஸ் பண்ணி முகத்துக்கு, முடிக்கு அப்ளை பண்ணுவேன். இதுதான் என்னோட அழகு பராமரிப்பு என்று முடிக்கிறார் பிரியதர்ஷினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: