Advertisment

13 ஹெரிடேஜ் வாக் சீரிஸ்- ரமீன் கான் டெல்லி வரலாற்றை திரும்பி பார்க்க வைத்தது எப்படி?

தான் பயன்படுத்தும் அனைத்து தகவல்களும் அவர் பல ஆண்டுகளாகப் படித்த புத்தகங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை, என்று ரமீன் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
delhi heritage walks

The latest walk was at Purana Qila. (Express Photo by Flora Swain)

ஷெர்ஷா சூரி மற்றும் பேரரசர் ஹுமாயூன் ஆகியோரால் கட்டப்பட்ட டெல்லியின் பழமையான கோட்டைகளில் ஒன்றான புரானா கிலாவிற்கு (Purana Qila) வெளியே ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகளின் குழுவுடன் ரமீன் கான் நிற்கிறார்.

Advertisment

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு 50 க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர், ரமீன் தனது கதையை ஆரம்பித்தபோது, கொளுத்தும் வெயிலிலும் அவர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

தொற்றுநோய் போதுதான் ரமீன் பாரம்பரியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘_citytales’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கினார். பின்னர், மக்கள் பாரம்பரிய நடைப்பயணங்களை (heritage walks) நடத்த என்னை அணுகினர், என்று அவர் கூறினார்.

வெறும் ஆறு மாதங்களில், ரமீன் தனது வரலாற்றுச் சுற்றுப்பயணங்களுக்காக நன்கு அறியப்பட்டார். இப்படி ஆர்வமாகத் தொடங்கிய வரலாறும் பாரம்பரியமும், இப்போது அவரது வாழ்க்கையாக மாறிவிட்டது.

நான் இன்ஜினியரிங் படித்தேன், பிறகு ஐ.ஐ.எம். இந்தூரில் எம்பிஏ படித்தேன், கார்ப்பரேட் உலகில் பணிபுரிந்தேன், ஆனால் அது என் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாக இருந்ததில்லை. கடந்த ஆறு-ஏழு ஆண்டுகளில், நான் வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் மிகுந்த ஆர்வத்தில் இருந்தேன். நான் இறுதியாக எனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டேன், என் முழு நேரத்தையும் இதற்காக அர்ப்பணித்தேன், என்று ரமீன் கூறினார்.

ரமீன் குதுப்மினார் சுற்றி நடை பயணங்களை வழிநடத்தி தனது கதையை தொடங்கினார், இது அப்படியே ஒரு full-fledged series ஆக விரிவடைந்தது.

நான் குதுப் தொடங்கி ஒரு chronological series உருவாக்கினேன், … ஏனெனில் குதுப் கதை 14 ஆம் நூற்றாண்டில் முடிவடைகிறது, எனது அடுத்த உலா நகரின் வரலாற்றை உள்ளடக்கியது… அடிப்படையில், ஒரு நடை முடிவடையும் இடத்தில், அடுத்த நடையின் கதை அதே வரலாற்று சம்பவத்துடன் தொடங்குகிறது. இந்த வழியில், நான் 13 நடைகளின் தொடரை உருவாக்கியுள்ளேன், என்று அவர் விளக்கினார்.

கல் அமைப்பைக் கொண்ட மனிதனின் கதையை பின்னிப் பிணைக்கும், வகையில் வரலாற்றுக் கதைகளை வெளிப்படுத்துவது முக்கியம் என்று ரமீன் கருதுகிறார்.

இப்போது 50க்கும் மேற்பட்டோர் ரமீன் வரலாற்று நடைப்பயிற்சியில் கலந்து கொள்கின்றனர், கோடைக் காலத்திலும் கூட… ஆராய்வதில் ஆர்வமுள்ளவர்கள், புகைப்படக் கலைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என அவரது நடைகள் அனைத்துத் தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

’இது அற்புதமாக இருந்தது, ரமீனின் கதைகளைக் கேட்டு மூன்று மணி நேரம் கடந்துவிட்டது, நேரம் போனதே தெரியவில்லை. அவருக்கு கதை சொல்லும் திறமை அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்’, என்று முதன்முறையாக பாரம்பரிய நடைப்பயணத்தில் கலந்து கொண்ட ராஷ்மி குண்டு (27) கூறினார்.

கடந்த மூன்று மாதங்களாக ரமீனின் பாரம்பரிய நடைப்பயணங்களில் தவறாமல் கலந்து கொண்ட லீனா சிங் (60), “அவருக்கு அபார அறிவு இருக்கிறது, நான் பல பாரம்பரிய நடைப் பயணங்களில் கலந்து கொண்டிருக்கிறேன், ரமீன் ஒரு சிறந்த கதைசொல்லி, நீங்கள் ஒரு திரைப்படத்தின் கதையை கேட்பது போல அவர் தனது கதைகளைச் சொல்கிறார். ஆனால் இதில் உண்மை  உள்ளது’ என்றார்.

ரமீன் பாரம்பரிய நடைப்பயணங்களில் பல விசுவாசமான பங்கேற்பாளர்கள் தங்களால் முடிந்தவரை பல நடைகளில் கலந்துகொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.

ஆதித்யா கக்கர் (52), வேலை நிமித்தமாக அடிக்கடி உலகம் முழுவதும் செல்ல வேண்டியிருப்பதால், சனிக்கிழமை இரவு தான் டெல்லிக்குத் திரும்பிச் செல்வதை உறுதிசெய்து, மறுநாள் ரமீன் நடைப்பயணத்திற்குச் செல்ல முடியும், என்பதை உறுதி செய்கிறார்.

’ரமீன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தகவல்களை சொல்கிறார், நான் அடிக்கடி அவரது நடைப்பயணங்களில் கலந்துகொள்கிறேன், அவர் வாக்குறுதியளிப்பதை எப்போதும் நிறைவேற்றுவார்’ என்று கக்கர் கூறினார்.

தான் பயன்படுத்தும் அனைத்து தகவல்களும் அவர் பல ஆண்டுகளாகப் படித்த புத்தகங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை, என்று ரமீன் கூறுகிறார்.

ஒரு தொடரைத் தவிர

13 chronological walk உட்பட ரமீன் 26 நிகழ்வுகளையும் நடத்துகிறார். பொதுவாக, கோடைக்காலத்தில் மக்கள் நடைபயணம் மேற்கொள்வதில்லை, அதனால்தான் மக்களை நடக்க வைக்காமல், அமர்ந்து நடத்த முடிவு செய்தேன். நான் பாரம்பரிய நடைப்பயணத்தை ஆண்டு முழுவதும் ஒரு நிகழ்வாக மாற்ற விரும்புகிறேன், என்று ரமீன் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment