மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரது மூளையின் அமைப்பில் மாற்றம் ஏற்படும் என லண்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
முக்கியமாக, மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளுதல் மற்றும் நினைவாற்றலுடன் தொடர்புடைய மூளையின் பாகத்தின் அமைப்பில் மன அழுத்தம் மாற்றத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மூளையில் நார் நரம்பிழைகளால் ஆன வெண்பொருள் எனப்படும் பகுதி, மூளை செல்களுடன் எலெக்ட்ரிக் சிக்னல் மூலம் மற்றவர்களுடன் தொடர்பகொள்ள செய்வதே அதன் வேலை. ஆனால், மன அழுத்தம் ஏற்பட்டால் வெண்பொருள் பகுதியின் அமைப்பில் பாதிப்பு உருவாகும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மூளையிலுள்ள நரம்பிழைகள் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப்பிணைந்திருப்பதற்கான முக்கியமான கூறு. இதில் பாதிப்பு ஏற்பட்டால் மனிதரின் உணர்ச்சி வெளிப்பாடுகள், நினைவாற்றல் உள்ளிட்டவற்றில் சிக்கல் ஏற்படும் என்ற அதிர்ச்சி முடிவு இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
மூளையின் வெண்பொருளின் தொகுப்பு தன்மை மன அழுத்தத்தால் சிதையும். லண்டனில் உள்ள 5 இளைஞர்களில் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. வெறுமையாக உணர்தல், சோர்வு, உற்சாகமின்றி இருத்தல் ஆகியவை மன அழுத்தத்தின் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அந்நபர் அதற்கு விரைந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.