Advertisment

சரும பராமரிப்புக்கு தினமும் 2 அவித்த முட்டையின் வெள்ளைக்கரு: பிரபல தோல் மருத்துவர் சொல்வது என்ன?

தினமும் இரண்டு அவித்த முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடலாம். மஞ்சள் கரு கொழுப்பு என்பதால், 2-3 நாளுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளலாம்- தோல் மருத்துவர் ஜெரிடோன்

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
DR Jerriton

DR Jerriton Brewin MBBS (DVL)

தோல் என்பது உடலின் மிகப்பெரிய உறுப்பு, இது தீங்கு விளைவிக்கும் கூறுகள், நுண்ணுயிரிகளிமிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது மற்றும் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. அதனால்தான் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மற்றும் அதன் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பது மிகவும் முக்கியமானது.

Advertisment

ஒழுங்கற்ற தோல் பராமரிப்பு, மன அழுத்தம் மற்றும் சூரிய ஒளி போன்ற பல காரணங்களால் நமது சருமம் பொலிவை இழக்க நேரிடும். சரியான கவனிப்பு இல்லாவிட்டால், சருமம் மந்தமாகவும், தொடுவதற்கு கரடுமுரடானதாகவும் இருக்கும்.

எனவேதான் ஒரு நல்ல சரும பராமரிப்புக்கு நிபுணர்கள் வழிகாட்டுதல்கள் எப்போதும் அவசியம்.

தோல், முடி மற்றும் அழகுக்கான திருநெல்வேலி குளோபல் ஸ்கின் கேர் மருத்துவமனையின் தோல் மருத்துவர், அழகுக்கலை மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஜெரிடோன், சரும பராமரிப்பு குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளத்துக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இங்கே..

நம் உடலில் சருமம் ஏன் முக்கியமானது? அதற்கு ஏன் கவனிப்பு தேவை?

நம் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், முதலில் வெளியே தெரிவது சருமம் தான், அதைத்தான் அனைவரும் பார்ப்பார்கள். நம் உடலில் ஏதாவது பிரச்னை இருந்தால், அது சருமத்தில் தெரிந்துவிடும். எனவேதான் நம் தோலை பாதுகாப்பது முக்கியம்.

சரும பராமரிப்பு

முதலில் சிறந்த பராமரிப்புக்கு, யூடியூப் வீடியோக்களை பார்த்து நேரடியாக முகத்தில் எதுவும் பயன்படுத்தக் கூடாது. ஹோம் ரெமெடிஸ், எலுமிச்சை, மஞ்சள் இப்படி எதுவும் முகத்தில் தடவக்கூடாது. இதனால் சிலருக்கு அலர்ஜி வரும். முகத்தில் எதையும் அப்ளை செய்வதற்கு முன், தோல் மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.

publive-image

மெடிக்கல் சென்று நீங்களே ஆயின்மெண்ட் வாங்கி சுயமாக பயன்படுத்தக்கூடாது

இரண்டாவதாக, முகத்தில் ஏதாவது சின்ன பிரச்னை வந்தால், மெடிக்கல் சென்று நீங்களே ஆயின்மெண்ட் வாங்கி சுயமாக பயன்படுத்தக்கூடாது. மெடிக்கலில் வேலை செய்யும் ஆட்கள், மருத்துவர்கள் கிடையாது. அவர்கள் தவறுதலான கிரீம் கொடுக்கலாம்.

ஒவ்வொருவர் சருமமும் வித்தியாசமானது. எனவே, தோல் மருத்துவரிடம் சென்று அவரது பரிந்துரையின் பெயரில் ஒரு சரியான சரும பராமரிப்பு வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இதேபோல முடிக்கும் தனி கவனிப்பு தேவை. முடி பராமரிப்புக்கு ஆன்லைனில் நிறைய தயாரிப்புகள் கிடைக்கின்றன, அதை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.

சரும பராமரிப்புக்கு சிறந்த டயட்

ஒட்டுமொத்தமாக உடல் ஆரோக்கியமாக இருந்தாலே, தோலும் பளபளப்பாக இருக்கும். உங்கள் உணவை காய்கறி, பழங்கள், பால் பொருட்கள் என மூன்றாக பிரிக்கலாம். தினமும் இரண்டு கப் பால் குடிக்கலாம். பால் குடிக்காதவர்கள் பூஸ்ட், போர்ன்விட்டா கலந்து குடிக்கலாம். தினமும் இரண்டு அவித்த முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடலாம். மஞ்சள் கரு கொழுப்பு என்பதால், 2-3 நாளுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளலாம்.

publive-image

காய்கறி ஜூஸ், பழ ஜூஸ், ஃபுரூட் சாலட் அனைத்தும் சருமத்துக்கு நல்லது

தினமும் ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, அன்னாச்சி என இரண்டு வகையான பழங்கள் அப்படியே சாப்பிட வேண்டும். மூன்றாவது உங்கள் உணவில் காய்கறி அதிகம் இருக்க வேண்டும். அதேபோல காய்கறி ஜூஸ், பழ ஜூஸ், ஃபுரூட் சாலட் அனைத்தும் சருமத்துக்கு நல்லது.

அப்படி ஜூஸ் போடும் போது, குடும்பத்தில் மரபணு ரீதியாக அல்லது வீட்டில் பெற்றோருக்கு சுகர் இருந்தால், சர்க்கரையை தவிர்க்க வேண்டும். அதேபோல வீட்டில் யாருக்கும் சுகர் பிரச்னை இல்லையென்றால், ஓரளவு சர்க்கரை சேர்க்கலாம்.

பழச்சாறும் தினமும் குடிக்கக் கூடாது. பச்சையாக சாப்பிடும் போதுதான் நார்ச்சத்து சேர்ந்து உடல் ஆரோக்கியம் மேம்படும்.

நம் உணர்வுகளும் சருமத்தை பாதிக்குமா?

ஆம், நாம் வயிற்றில் இருக்கும் போது தோலும், மூளையும் ஒரே செல்லில் இருந்து இரண்டாக பிரிந்து வளரும். எனவே மூளையில் நடப்பது எல்லாமே சருமத்தையும் பாதிக்கும். மன அழுத்தம், கோபம், எரிச்சல் இது அனைத்துமே சருமத்தை பாதிக்கும். குறிப்பாக சொரியாசிஸ் போன்ற  சில நோய்கள் வரும் போது, அதுபற்றி நினைத்தாலே பிரச்னை அதிகமாகும். எனவே நம் மனதை எப்போதும் அமைதியாக, தெளிவாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

தினசரி சரும பராமரிப்புக்கு என்ன செய்யலாம்?

publive-image

நீங்கள் வெளியே செல்வதாக இருந்தால் சன்ஸ்கீரின் அப்ளை செய்து, அதன்மேல் மேக்கப் போடலாம்

ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ப சரும பராமரிப்பு இருக்கிறது. பொதுவாக ஃபேஸ்வாஷ் கொண்டுதான் முகம் கழுவ வேண்டும். ஒவ்வொரு சருமத்துக்கும், வயதுக்கும் ஏற்றமாதிரி ஃபேஸ் வாஷ் இருக்கிறது. அதை மருத்துவரிடம் கேட்கலாம். முகம் கழுவிய பிறகு லேசாக ஈரம் இருக்கும் போதே மாய்ஸ்சரைசர் தடவ வேண்டும். இப்படி செய்வதால் மாய்ஸ்சரைசரை சருமம் எளிதில் உறிஞ்சிவிடும். உங்களுக்கு ஆயிலி ஸ்கின் இருந்தால், டோனர் பயன்படுத்தலாம். இல்லையெனில் தேவையில்லை. பிறகு நீங்கள் வெளியே செல்வதாக இருந்தால் சன்ஸ்கீரின் அப்ளை செய்து, அதன்மேல் மேக்கப் போடலாம்.

நீங்கள் வீட்டில் இருந்தாலும், ஜன்னல் வழியாக உள்ளே வெயில் வரும் என்றால் சன்ஸ்கீரின் போட வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏசியில் இருந்தால் சன்ஸ்கீரின் தேவையில்லை. மேலும் நீங்கள் அதிகமாக மொபைல், லேப்டாப் பார்க்கும் போது ஸ்கீரினிலிருந்து ப்ளு லைட் வரும். இதற்காக ப்ளு லைட் ஃபில்டர் இருக்கும் சன்ஸ்கீரின் பயன்படுத்தலாம்.

கண்களுக்கு தனியாக ஐ கிரீம் அவசியமா?

publive-image

கண்களை அடிக்கடி கசக்குவதினால் கூட பிரச்னை வரலாம்

கண்களுக்கு கீழ் ஏதாவது பிரச்னை இருந்தால் ஐ கிரீம் பயன்படுத்துவது உண்டு. இதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. சிலருக்கு கண்களுக்கு கீழே கருப்பு நிறம் இருக்கும், சிலருக்கு கண்களுக்கு கீழே வீக்கம் இருக்கும். சிலருக்கு சுருக்கம், சோர்வான கண்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஐ கிரீம் இருக்கிறது. சில நேரங்களில் தைராய்டு, கண் அழுத்தம், கண்ணாடி போடுவது, கண் அலர்ஜி, கண்களை அடிக்கடி கசக்குவதினால் கூட பிரச்னை வரலாம். எனவே பிரச்னைக்கான காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதற்கு சிகிச்சையளிக்கும் போது, அண்டர் ஐ பிரச்னை சரியாகும்.  

ஆன்டி ஏஜிங்

ஆன்டி ஏஜிங் முதல் அம்சமே அனைவரது தோலிலும் மாய்ஸ்சரைசர் இருக்கும். அனைத்து ஆன்டி ஏஜிங் கிரீமிலும் மாய்ஸ்சரைசர் இருக்கும். இதை ஆரம்பிக்க குறிப்பிட்ட வயது எதுவும் கிடையாது. 6-7 வயதுகளில் இருந்தே இதை ஆரம்பிக்கலாம். ஆண்டி ஏஜிங்கின் முதல் படி மாய்ஸ்சரைசிங் தான். முகம் கழுவிய பிறகு அதை அப்படியே விடக்கூடாது, மாய்ஸ்சரைசர் போட வேண்டும் என குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.

publive-image

30 வயதுக்கும் மேல் ஆகும் போது சருமத்தில் இருக்கும் தசைகள் எல்லாமே பலவீனம் ஆகும்

20 வயதாகும் போது மாய்ஸ்சரைசருடன் ரெட்டினால் சீரம் அல்லது கிரீம் சேர்க்கலாம். 30 வயதாகும் போது ரெட்டினால் உடன் ஹைலூரானிக் ஆசிட், வைட்டமின் சி சீரம் இப்படி படிபடியாக சேர்த்துக் கொண்டே போகலாம். 30 வயதுக்கும் மேல் ஆகும் போது சருமத்தில் இருக்கும் தசைகள் எல்லாமே பலவீனம் ஆகும். அதற்கு ஆன்டிஏஜிங் இன்ஜெக்‌ஷன்ஸ், ஃபேஸ் லிஃப்டிங் செயல்முறைகள் இருக்கிறது.

இப்போது கொலாஜன் ஷாட்ஸ், கொலாஜன் டேப்லெட்ஸ் என தோலுக்கு என்று தனி மார்கெட் வந்திருக்கிறது. அது வியாபாரம் மட்டுமே. இது விலை அதிகமாக இருக்கும். ஆனால் இது நல்லது என்று சொல்வதற்கு இப்போது போதுமான ஆதாரங்கள் இல்லை.

எப்போது தோல் மருத்துவரை அணுக வேண்டும்?

ஒரு சின்ன பருவாக இருக்கலாம். அதில் ஏதாவது தவறான ஆயின்மெண்ட் பயன்படுத்துவார்கள். அதனால் பெரிய பிரச்னையாகிவிடும். இறுதியில் தான் தோல் மருத்துவரிடம் செல்வார்கள், அப்படி இல்லாமல் ஏதாவது சிறிய பாதிப்பு இருந்தல் கூட, உடனே தோல் மருத்துவரிடம் சென்று கலந்தாலோசித்து அவர் கூறும் அறிவுரையை பின்பற்ற வேண்டும்.

publive-image

தோல் மருத்துவரை சந்தித்து அவர் கூறும் அறிவுரையை பின்பற்றுவது நல்லது

சிலர் சருமத்தில், ஏதாவது கருப்பு நிறம் தெரிந்தால், அதுபோக வேண்டும் என்று தேய்ப்பார்கள், நன்கு தேய்த்தால் கருப்பு போய்விடும் என்று நினைப்பார்கள், ஆனால் அப்படி செய்வதால் சருமம் இன்னும் கருப்பாகிவிடும், முகத்துக்கு ஃபேஷ் வாஷ் பயன்படுத்தாமல், சோப் பயன்படுத்துவார்கள். இப்படி சிறிய சிறிய விஷயங்களை மாற்றினாலே போதும்.

சருமத்தில் சிறியதாக கூட எந்த பாதிப்பு இருந்தாலும், நீங்கள் தோல் மருத்துவரை சந்தித்து அவர் கூறும் அறிவுரையை பின்பற்றுவது நல்லது என்று முடிக்கிறார் தோல் மருத்துவர் ஜெரிட்டோன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment