/indian-express-tamil/media/media_files/2025/10/13/mangaiyarkarasi-2025-10-13-16-48-34.jpg)
முருக பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விரத நாள் என்றால் அது ஐப்பசி மாதத்தில் வரும் மகா கந்த சஷ்டி விரதம் தான். முருகப் பெருமானின் அருளை பெறுவதற்காகவும், தங்களின் வாழ்வில் இருக்கும் மிகக் கடுமையான பிரச்சனைகள் தீர வேண்டும் என்றும், தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்றும் பிரதமை துவங்கி சஷ்டி வரையில் மிகக் கடுமையாக விரதம் இருந்து பக்தர்கள் வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இந்நிலையில், கந்த சஷ்டி விரதத்தை எப்போது துவங்கலாம் என்று தேச மங்கையர்க்கரசி விளக்கமளித்துள்ளார். அவர் பேசியதாவது, “கந்த சஷ்டி வரும் 21-ஆம் தேதி மாலை 5.49 மணிக்கு தொடங்கி வரும் 22-ஆம் தேதி மாலை 7:40 மணிக்கு முடிவடைகிறது. வரும் 22-ஆம் தேதி வரும் 28-ஆம் தேதி வரை கந்த சஷ்டி விரதம் நடைபெற இருக்கிறது. கந்த சஷ்டி விரதம் 7 நாட்கள் நடைபெறும். கந்த சஷ்டி விரதம் சூரனை சம்ஹாரம் பண்ணுவதோடு முடிவதில்லை முருகன் வள்ளி - தேவானையை திருமணம் செய்து சாந்தமான பிறகு தான் நாம் இந்த கந்த சஷ்டி விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி பூர்த்தி செய்தால் தான் நாம் வேண்டியது 100 சதவிகிதம் கிடைக்கும்.
கந்த சஷ்டி விரதமானது குழந்தை பேருக்கான விரதமாகும். மேலும், இந்த விரதம் மூலம் எல்லா வகையான நலன்களையும் முருகரிடம் இருந்து நம் பெறலாம். வாழ்க்கையில் இருக்கும் நம் தேவைகளை இந்த கந்த சஷ்டி விரதம் பூர்த்தி செய்கிறது. மாதம் தோறும் வரும் சஷ்டியில் விரதம் இருக்காவிட்டால் கூட இந்த மகா கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டால் எண்ணியது எண்ணியபடி கைக்கூடும். யார் யாருக்கு உடல் நிலை எப்படி இருக்கிறது. எந்த சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து அதன்படி விரதம் இருங்கள்” என்றார்.
விரதம் எப்படி இருக்கலாம்?
இரண்டு வேளை சாப்பிட்டு ஒரு வேளை பட்டினியாக இருப்பது
ஒரு வேளை சாப்பிட்டு இரண்டு வேளை பட்டினியாக இருப்பது
மூன்று வேளையும் நீர் ஆகாரங்கள் மட்டும் அருந்துவது
சில பேர் ஒரே ஒருவேளை உப்பில்லாத உணவை எடுத்துக்கொள்வார்கள். சில பேர் வேக வைத்த பருப்புடன் சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள். அதிலும் உப்பு இருக்காது. இன்னும் சிலர் இது எதுவுமே சாப்பிடாமல் பழ சாறு மட்டுமே அருந்தி விரதம் இருப்பார்கள். சிலர் இளநீர் விரதம் இருப்பார். அதாவது மூன்று வேளையும் இளநீர் மட்டுமே குடித்துக் கொண்டு விரதம் இருப்பார்கள்.
இந்த விரதத்தில் மிகவும் கடுமையான விரதம் மிளகு விரதம். முதல் நாள் ஒரு மிளகு, இரண்டாவது நாள் இரண்டு மிளகு என ஏழு நாட்கள் ஏழு மிளகுகளை சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். இதில் உங்களுக்கு எது ஏதுவாக இருக்குமோ அந்த விரதத்தை கடைப்பிடியுங்கள். எந்த விரதம் இருந்தாலும் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். உடலில் உள்ள கழிவுகள் நீங்க வேண்டும் என்றுதான் நாம் விரதம் இருக்கிறோம். அதற்கு தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும்.
விரதம் இருக்கும்போது என்ன செய்யலாம்?
விரதம் இருக்கும் பொழுது தரையில் படிப்பது எல்லோருக்கும் பொருந்தும். உடல் நிலை சரியில்லாதவர்கள் சுத்தமான படுக்கையில் படுத்துக் கொள்ளலாம். காலணிகள் போடாமல் இந்த விரதத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்றால் நீங்கள் அதை செய்யலாம். மாலை போடாமல் காப்பு கண்டிக் கொண்டு கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.