கலக்க போவது யாரு சீசன் 5 இல் தான் தீனாவும் கலந்து கொண்டார். அதில் சரத்தும், தீனாவும் சேர்ந்து செய்த காமெடி அட்டகாசங்கள் பலரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தது.
கலக்க போவது யாரு சீசன் 5 இல் தான் தீனாவும் கலந்து கொண்டார். அதில் சரத்தும், தீனாவும் சேர்ந்து செய்த காமெடி அட்டகாசங்கள் பலரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தது.
விஜய் டிவியையும், ரியாலிட்டி ஷோக்களையும் பிரிக்க முடியாது. விஜய் டிவியின் பலமே அந்த சேனலில் பணியாற்றும் காமெடியன்கள் தான்.
Advertisment
அந்தவகையில் ரசிகர்களை பொறுத்தவரை கலக்க போவது யாரு சீசன் 5 மிகவும் ஸ்பெஷல். இதில் தான் அறந்தாங்கி நிஷா- பழனி காம்போ, சரத்- தீனா காம்போ, முல்லை-கோதண்டம் காம்போ, குரேஷி என ஒரு காமெடியன் பட்டாளமே ரசிகர்களை வயிறு வலிக்க வலிக்க சிரிக்க வைத்தது.
அப்படி சில காமெடியன்கள் தங்கள் அதீத திறமை மூலம், வெள்ளித்திரையிலும் கால்பதித்து பிரகாசித்து வருகின்றனர்.
கலக்க போவது யாரு சீசன் 5 இல் தான் தீனாவும் கலந்து கொண்டார். அதில் சரத்தும், தீனாவும் சேர்ந்து செய்த காமெடி அட்டகாசங்கள் பலரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தது.
Advertisment
Advertisements
அதன்பிறகு, தீனா பட வாய்ப்புகள் கிடைத்து வெள்ளித்திரைக்கு சென்றுவிட்டார். பா பாண்டி, கைதி, விக்ரம், ஆகிய படங்களின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார். சில மாதங்களுக்கு முன் தீனா சொந்த வீடு கட்டினார். இந்நிலையில் சமீபத்தில் தீனாவுக்கு திருமணம் முடிந்தது.
இது பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம், தீனா மனைவி பிரகதி கிராஃபிக் டிசைனர்.
திருமணத்துக்கு பிறகு தீனா, தனது மனைவியுடன் சேந்து பிஹைண்ட்வுட்ஸ் டிவி யூடியூப் சேனலுக்கு முதல்முறையாக பேட்டி கொடுத்தார்.
அதில் தன்னுடைய புது வீடு, புது கார், புது மனைவி, லியோ படம் என பல விஷயங்களை தீனா அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
இங்கே பாருங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“