அதிக குளுக்கோஸ் அளவுகள், நீரிழிவு நோயின் அடையாளம், இவை முடி ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். உங்கள் வாழ்க்கை முறை உங்கள் முடியின் தரத்தையும் பாதிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீரிழிவு நோயில் அதிக குளுக்கோஸ் அளவு, பல்வேறு வழிகளில் முடி உதிர்தலுக்கு பங்களிக்கும்.
டாக்டர் கவுரவ் ஜெயின் (senior consultant, internal medicine, Dharamshila Narayana Suprspeciality Hospital) கூறுகையில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால், ஹேர் ஃபாலிக்கிளுக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். குறைந்த ரத்த ஓட்டம் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதைத் தடுக்கிறது, அதன் வளர்ச்சி மற்றும் வலிமையைக் குறைக்கிறது, என்றார்.
இதன் மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கங்களில் ஒன்று அலோபீசியா அரேட்டா (alopecia areata), டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பொதுவான ஒரு ஒரு ஆட்டோ இம்யூன் நிலை. இது திட்டு திட்டாக முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது என்று டாக்டர் அனந்தராமன் (consultant – endocrinology, Chinmaya Mission Hospital, Bengaluru) கூறினார்.
கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு, டெலோஜென் எஃப்லூவியத்தையும் (telogen effluvium) தூண்டலாம், அங்கு முடி முன்கூட்டியே உதிரும் கட்டத்தில் நுழைகிறது, இதன் விளைவாக உதிர்தல் அதிகரிக்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ரத்த நாளங்கள் காரணமாக ரத்த ஓட்டம் குறைவதால் முடி வளர்ச்சி குறைகிறது மற்றும் மெல்லிய முடிக்கு வழிவகுக்கிறது, என்று டாக்டர் அனந்தராமன் வலியுறுத்தினார்.
மேலும், நீரிழிவு நோய் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும், இதில் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) அதிகரித்த அளவு, முடி உதிர்தலுடன் தொடர்புடைய ஹார்மோன்.
DHT ஹேர் ஃபாலிக்கிள்ஸை சுருக்கி, ஒவ்வொரு முடி இழைக்கும் குறுகிய ஆயுளுக்கு வழிவகுக்கும் மற்றும் இறுதியில் மெலிந்து போகும் என்று டாக்டர் ஜெயின் கூறினார்.
மேலும், நீரிழிவு நோயாளிகள் பூஞ்சை தொற்று மற்றும் செபோர்ஹெக் டெர்மடிடிஸ் போன்ற நிலைமைகளை அனுபவிக்கலாம், இது உச்சந்தலையையும் முடியையும் மோசமாக பாதிக்கிறது.
அழற்சி மற்றொரு காரணி; நீரிழிவு நோய் பெரும்பாலும் நாள்பட்ட அழற்சியை உள்ளடக்கியது, இது ஹேர் ஃபாலிக்கிளை எதிர்மறையாக பாதிக்கலாம். இந்த அழற்சி, சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை சீர்குலைக்கும், மேலும் ஹேர் ஃபாலிக்கிள்ஸை உதிர்க்கும் கட்டத்தில் தள்ளும், என்று டாக்டர் ஜெயின் கூறினார்.
சுருக்கமாக, பலவீனமான ரத்த சுழற்சி, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், வீக்கம் மற்றும் நீரிழிவு நோயுடன் தொடர்புடைய சிக்கல்கள் ஆகியவற்றின் சிக்கலான இடைவினைகள் முடி உதிர்தலுக்கு கூட்டாக பங்களிக்கும்.
ரத்த சர்க்கரை அளவை நிர்வகித்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுதல் மற்றும் மருத்துவ ஆலோசனையைப் பெறுதல் ஆகியவை இந்த சாத்தியமான சிக்கலைத் தணிப்பதில் முக்கியமான படிகள், என்று டாக்டர் ஜெயின் கூறினார்.
டாக்டர் அனந்தராமனின் கூற்றுப்படி, இந்த சிக்கல்களைத் தணிக்க, உகந்த ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை பராமரிப்பது முக்கியம். இருப்பினும், முடி உதிர்தல் பல்வேறு காரணிகளால் ஏற்படலாம் என்பதால், தனிப்பட்ட ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு ஒரு சுகாதார நிபுணரின் விரிவான மதிப்பீடு அறிவுறுத்தப்படுகிறது, என்றார்.
Read in English: Can diabetes lead to hair loss?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.