If the body has these symptoms, the sugar level may be increasing கால் வலி, பல் ஈறில் ரத்தக் கசிவு இருக்கா? இதுதான் அறிகுறி.. உடனே சுகர் டெஸ்ட் செய்து பாருங்க! | Indian Express Tamil

கால் வலி, பல் ஈறில் ரத்தக் கசிவு இருக்கா? இதுதான் அறிகுறி.. உடனே சுகர் டெஸ்ட் செய்து பாருங்க

Warning Signs Of High Blood Sugar In Our Body: சர்க்கரை நோய் அறிகுறிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

கால் வலி, பல் ஈறில் ரத்தக் கசிவு இருக்கா? இதுதான் அறிகுறி.. உடனே சுகர் டெஸ்ட் செய்து பாருங்க

Diabetes symptoms | Tips to control diabetes | ரத்த சர்க்கரை அளவை தினமும் நிர்வகிக்க வேண்டியது அவசியம். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது அவசியம். சர்க்கரை உள்ளவர்கள் உடற்பயிற்சி, நடைப்பயணம், ஆரோக்கிய உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும். இக்காலத்தில் குறைந்த வயதுடையவர்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். உணவு பழக்க வழக்கம், மரபு காரணமாக சர்க்கரையால் பாதிக்கப்படுகின்றனர்.

உயர் இரத்த சர்க்கரை அடிக்கடி தாகம், சிறுநீர் கழிப்பு, சோர்வு, மங்கலான பார்வை, திடீர் எடை இழப்பு ஆகியவகைக்கு வழிவகுக்கும். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது அவசியம். எந்த நோயும் வரும் முன் காப்பது அவசியம். சர்க்கரை நோய் அறிகுறிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

கண்கள்

உயர் இரத்த சர்க்கரை விழித்திரையில் பாதிப்பை ஏற்பத்தலாம். மங்கலான பார்வை, கண்புரை, கிளௌகோமா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ரெட்டினோபதி போன்ற கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ரெட்டினோபதி என்பது விழித்திரையில் ஏற்படும் மாற்றங்கள். இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

கால் பாத வலி

சர்க்கரை நோய் அறிகுறிகளாக உங்கள் கால் பாதங்களில் வலி ஏற்படும். 2 வகையான பாதிப்புகள் வரும். பாதத்தில் எவ்வித உணர்வும் இருக்காது. உணர்வு இழப்பு ஏற்படும். இரண்டாவதாக ரத்த ஓட்டம் தடை படும்.

சிறுநீரகம்

சிறுநீரகங்கள் உடலின் ஒருங்கிணைந்த உறுப்பாகும். இது உடலில் இருந்து அனைத்து நச்சுகள் மற்றும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றுகிறது. உறுப்பு திறம்பட செயல்பட உதவும் சிறிய இரத்த நாளங்கள் இதில் அடங்கும். இருப்பினும், உயர் இரத்த சர்க்கரை ரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம். இது பின்னாளில் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சர்க்கரை நோயில் இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும்.

பல் ஈறில் ரத்தக் கசிவு

ஈறு நோய் பீரியண்டால்ட் நோய் என்றும் அழைக்கப்படுகிறது, இது உயர் இரத்த சர்க்கரையுடன் தொடர்புடைய ஒரு பொதுவான நிலை. இது பொதுவாக ஈறுகளில் இரத்த ஓட்டத்தை குறைக்கும் இரத்த நாளங்கள் அடைப்பு அல்லது தடித்ததால் ஏற்படுகிறது. எனவே தசைகள் பலவீனமடைகின்றன. ஈறு நோய் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதனால் ரத்தக் கசிவு, ஈறுகளில் வலி ஆகியவை ஏற்படுகிறது.

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அறிகுறிகள்

  1. வழக்கத்தை விட அதிக தாகம்
  2. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  3. திடீர் எடை குறைவு
  4. உடல் சோர்வு
  5. எரிச்சல் அடைவது. பிற மனநிலை மாற்றங்கள்
  6. மங்கலான பார்வை
  7. புண்கள் குணமாகாமல் இருத்தல்
  8. ஈறு நோய், பார்வை குறைபாடு, அடிக்கடி தொற்று ஏற்படுதல்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Diabetes symptoms 6 body parts that can signal high blood sugar