காஷ்மீர் போல காட்சியளித்த கேரளா! பனிமழைப் பொழிவா?

ஆலங்கட்டி மழையின் அளவு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அதிகமாக இருந்தது.

கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் பெய்த ஆலங்கட்டி மழையின் காரணமாக, அப்பகுதி பனிப்பிரதேசம் போல காட்சியளித்தது.

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் திங்கள் கிழமை ஆலங்கட்டி மழை பொழிந்தது. அதி தீவிரமாக பெய்த இந்த ஆலங்கட்டி மழையினால், சாலையெங்கும் ஆலங்கட்டிகள் குவிந்து காணப்பட்டன. வழக்கமாக ஆலங்கட்டி கீழே விழுந்ததும் மழை நீராக கரைந்து ஓடிவிடும். ஆனால், அதிகமாக அங்கு தேங்கி கிடந்த ஆலங்கட்டியினால் அப்பகுதி முழுவதும் வெண்மையாக காணப்பட்டது.

உடனே, இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது. கேரளாவில் இது போன்ற ஒரு நிகழ்வு இதற்கு முன்னர் நிகழ்ந்ததே இல்லை எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

ஆனால், காலம் காலமாக அப்பகுதியில் இருந்த மக்கள் தெரிவித்தது என்னவென்றால், ஆலங்கட்டி மழைப்பொழிவு என்பது கேரளாவில் சகஜமானது தான். ஆனால் தற்போது பெய்த ஆலங்கட்டி மழையின் அளவு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அதிகமாக இருந்தது. சிலர், அந்த புகைப்படங்களை பார்க்கும் ஆலங்கட்டி மழையை போல அல்லாமல் பனிப்பொழிவு நிகழ்ந்தது போன்றே தோன்றுவதாக தெரிவித்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் பெய்த ஆலங்கட்டி மழையினால் விவசாயப் பயிர்கள் சில பகுதிகளில் சேதமடைந்தன. குறிப்பாக சுத்தன் பத்தேரி பகுதியில் ஆலங்கட்டி மழையினால் பாதிப்பு அதிகமாக இருந்ததாம்.

இந்த ஆலங்கட்டி மழையானது கேரளாவை பனிப்பிரதேசம் போல தோன்றச் செய்த போதிலும், இந்த ஆண்டு வெயில் கொளுத்தியது. கேரளாவில்ச மீபத்திய ஆண்டுகளில் பதிவான வெயில் தாக்கத்தை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close