உடற்பயிற்சி செய்வது நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவதுடன், ஆயுளையும் அதிகப்படுத்தும் என பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நடை பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங், யோகா, ஜிம்மில் உடற்பயிற்சி என எந்த வடிவத்திலாவது தினந்தோறும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகிறது. ஆனால், உடற்பயிற்சிக்கு பின் நாம் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனை பசி. கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு ஏற்படும் பசியால் நாம் அளவுக்கதிகமாக உண்போம். இதனால், உடற்பயிற்சியால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பல நேரங்களில் நமக்கு கிடைப்பதில்லை. அதனால், உடற்பயிற்சிக்குபின் உடனேயே பசி ஏற்படுவதை தவிர்க்க சில வழிமுறைகளை அறிந்துகொள்ளுங்கள்.
அதிகமாக தண்ணீர் குடியுங்கள்:
உடற்பயிற்சிக்கு பின் நமக்கு நீர்ச்சத்து குறைந்தாலும்கூட, பசிப்பதுபோல் தோன்றும். அதனால், உடற்பயிற்சிக்கு முன்னும், உடற்பயிற்சி செய்யும்போதும், உடற்பயிற்சிக்கு பின்னும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். இதனால், உடற்பயிற்சிக்கு பிறகு அதிகம் பசி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்:
நீங்கள் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பது அவசியம். அதிக நேரம் உடற்பயிற்சி செய்தாலும் பசி உணர்வு ஏற்படும். உடற்பயிற்சிக்கு பின் அதிகமாக உணவருந்துவதை தவிர்க்க, என்ன சாப்பிட வேண்டும் என்பதை திட்டமிட்டுகொள்ளுங்கள்.
நீர் சார்ந்த உடற்பயிற்சிகள்:
அதிக பளு தூக்குதல் மற்றும் நீச்சல் உள்ளிட்ட நீர் சார்ந்த உடற்பயிற்சிகள் அதிக பசியுணர்வை உண்டாக்கும். ஏனென்றால், இந்த உடற்பயிற்சிகளால், உங்களது தசை வலிமையாகும், பெரிதாகும். தசை வலிமையாகும் அளவு அதிகமாவதற்கு ஏற்ப பசி அதிகரிக்கும். நீர் சார்ந்த உடற்பயிற்சிகளின்போது தண்ணீரிலுள்ள வெப்பம் உங்க்களது உடலை குளிர்ச்சியாக்குகிறது. இதனால், உங்கள் ஆற்றல் குறைந்து பசியுணர்வு ஏற்படும்.