தினமும் எவ்வளவு மணிநேர உறக்கம் அவசியம்? சரியான நேரத்தில் எழ என்ன செய்யலாம்?

ஒவ்வொரு நால் இரவு உறக்கமும் நான்கு முதல் ஆறு சுழற்சிகளைக் கொண்டது. ஒவ்வொரு உறக்க சுழற்சியும் 90 முதல் 100 நிமிடங்களைக் கொண்டது.

காலையில் உங்களுடைய அலாரம் அடிக்கும்போது சோம்பலாக உணர்கிறீர்களா? இன்னும் ஒரு 5 நிமிடங்கள் கழித்து அலராத்தை அமைத்துவிட்டு தூங்குபவரா நீங்கள்? காலையில் எழுவதற்கு சிரமப்படும் நபரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் உங்களுடைய உறக்கத்தின் சுழற்சியில் பாதியில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதனால், நீங்கள் எழுந்திருக்கும் நேரத்தைவிட முன்கூட்டியே அலார நேரத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படியென்றால், சற்று தாமதமான நேரத்தை அலாரத்தில் செட் செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களால் புத்துணர்ச்சியுடன் காலையில் எழுந்திருக்க முடியும்.

ஒவ்வொரு நால் இரவு உறக்கமும் நான்கு முதல் ஆறு சுழற்சிகளைக் கொண்டது. ஒவ்வொரு உறக்க சுழற்சியும் 90 முதல் 100 நிமிடங்களைக் கொண்டது. இந்த கால அளவு ஒவ்வொரு தனி நபருக்கும் வேறுபடும். வயது, பாலினர், உணவுப்பழக்கம், உடல் ஆரோக்கியம் இவற்றைப் பொறுத்துதான் உங்களின் உறக்க நேரம் அமையும். எது எப்படியோ, ஒவ்வொருவரும் ஒரு நாள் உறக்கத்தில் ஐந்து முழுமையான சுழற்சிகளை நிறைவு பெற வேண்டும். எளிதாக சொல்ல வேண்டுமானால், ஏழரை மணி நேர உறக்கம் நம் அனைவருக்கும் அத்தியாவசியமானது

உங்களுடைய உறக்க சுழற்சிகளை நீங்கள் சரியாக அமைத்துக் கொள்வதற்கு ஒரு வழி உண்டு. நீங்கள் உறங்கப்பொகும் நேரத்தையும், காலையில் எழுந்திருக்கும் நேரத்தையும் குறித்துக்கொள்ள வேண்டும். அப்படி தினமும் செய்யும்போது உங்களுடைய உறக்க நேரம் தினமும் ஒரே மாதிரியாக அமையும்.

உதாரணமாக, நீங்கள் காலை 8 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொள்வோம். நீங்கள் நிச்சயம் நள்ளிரவு 11 மணிக்கு உறங்கச் சென்றுவிட வேண்டும். அப்போதுதான் காலையில் நீங்கள் சோம்பலாக உணர மாட்டீர்கள்.

நீங்கள் காலையில் எழும்போது சோம்பலாக இருக்கிறீர்கள் என்பதை எப்படி உணர வேண்டும் என தெரியுமா? கொட்டாவி விடுதல், கண்களை தொடர்ந்து சிமிட்டுதல், தசைகளில் வலி ஆகியவையே சோம்பலின் அறிகுறிகளாகும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close