கொழுப்பு கட்டி இருக்கா? கரைய வைக்க கர்சீப் போதும்: டாக்டர் தீபா டிப்ஸ்

கொழுப்பு கட்டியை எப்படி எளிய முறையில் கரைக்கலாம் என்று மருத்துவர் தீபா ஒரு சில டிப்ஸ்கள் வழங்கியுள்ளார். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கொழுப்பு கட்டியை எப்படி எளிய முறையில் கரைக்கலாம் என்று மருத்துவர் தீபா ஒரு சில டிப்ஸ்கள் வழங்கியுள்ளார். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
lippomas

கொழுப்பு கட்டி என்பது நமது சருமத்திற்கு தசை லேயர்க்கும் இடையில் இருப்பது தான். கொழுப்பு கட்டி மிகவும் மிருதுவாக இருக்கும் நமது உடலில் எந்த தொந்தரவுகளையும் கொடுக்காது. ஆனால், காலப்போக்கில் பெரிதாகி இது இருக்கும் இடம் என்பது நமக்கு பிரச்சனைக்கு உரியதாக இருக்கலாம். கொழுப்பு கட்டி பொதுவாக நமது வயிற்று பகுதி, தோள் பட்டை, நெஞ்சு பகுதி, கால்கள் என எல்லாப் பகுதிகளிலும் வரக் கூடியது ஆகும்.

Advertisment

இந்த கொழுப்பு கட்டி தசைகளில் இருக்கும் பொழுது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இவை வளர்ந்து நமது உடலின் ஒரு பகுதியில் அழுத்தம் ஏற்படுத்தும் போது பிரச்சனையாக மாறுகிறது. உதாரணமாக கழுத்து பகுதியில் இருக்கும் ஒரு கொழுப்பு கட்டி நன்கு வளர்ந்து ரத்த நாளத்தில் அழுத்தம் கொடுத்து ரத்த ஓட்டத்தை குறைத்துவிடும். அப்போது நாம் கண்டிப்பாக இந்த கொழுப்பு கட்டியை அகற்றிதான் ஆகவேண்டும்.

மற்றபடி இந்த கொழுப்பு கட்டிகளால் எந்த தொந்தரவும் இல்லை. கொழுப்பு கட்டி என்பது உடல் பருமன் மற்றும் தலைமுறைகள் மூலம் வரலாம். நமக்கு காயம் ஏற்பட்டு ஆறும் போது தருணத்தில் கொழுப்பு கட்டி உருவாகலாம். இந்த கொழுப்பு கட்டிகளை எப்படி கரைய வைக்கலாம் என்பது குறித்து மருத்துவர் தீபா விளக்கமளித்துள்ளார். அவர் பேசியதாவது, “முதலில் உடல் பருமனை குறைக்க வேண்டும். பின்னர் ஒரு நாளில் இரண்டு வேளைகள் மட்டும் சாப்பிட வேண்டும். இதை இண்டர்மிட்டன் டையட் என்று கூறுவார்கள். காலையில் எண்ணெய், காரம், புளிப்பு இல்லாத உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முளைக்கட்டிய பயிர் வகைகள், பழங்கள், ஆவியில் வேக வைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மதியம் உங்களுக்கு தேவையான ஆவியில் வேக வைத்த உணவை எடுத்துக் கொள்ளலாம். இப்படி நம் உணவு முறையை பழக்கப்படுத்தும் போது நம் உடலில்  தேவையற்ற கொழுப்புகள் தேங்காமல் பார்த்துக் கொள்ளலாம். எங்கு கொழுப்பு கட்டி இருக்கிறதோ அதற்கு மேலேயும் அது சார்ந்த இடத்திலேயும் நாம் மண் சிகிச்சை கொடுப்பதன் மூலம் அந்த கட்டிகள் நாளுக்கு நாள் குறையும். 

Advertisment
Advertisements

எலுமிச்சை பழசாறு குடிப்பதன் மூலம் கொழுப்பு கட்டி குறைய வாய்ப்புள்ளது. நாடு கமலா ஆரஞ்சின் தோலை வெயிலை நன்கு காய வைத்து கொழுப்பு கட்டியில் போடலாம். சிறிது மஞ்சள் சேர்த்து போடும் பொழுது கொழுப்பு கட்டி குறையும். அடுத்தாக, ஒரு காட்டன் கர்சீப் எடுத்துக் கொள்ளவும். இதனை குளிர்ந்த நீரில் நனைத்து கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் கட்டுவதன் மூலம் கொழுப்பு கட்டியை கரைய வைக்கலாம்” என்றார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: