/indian-express-tamil/media/media_files/2025/04/30/FVE5kaR9TEUYaLRIi7j5.jpg)
நிறைய பேருக்கு கால் பாதங்களில் வெடிப்பு இருக்கும். பார்ப்பதற்கு இவை சாதாரணமாக தோன்றினாலும், சில சமயங்களில் வலி ஏற்பட்டு நம் அன்றாட பணிகளில் ஈடுபட முடியாத சூழல் உருவாகும். இந்தப் பிரச்சனைக்கான காரணம் மற்றும் இதனை சரி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து டாக்டர் மைதிலி தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
உடலில் சூடு அதிகரிக்கும் போது மென்மையான தசைகளில் வெடிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக தான் கால் பாதங்களில் அதிகமாக வெடிப்பு ஏற்படுகிறது. பாத வெடிப்பை சரி செய்ய ரத்த நெல்லி பயன்படுகிறது என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.
இரத்த நெல்லிப் பழத்தை நசுக்கி, தினமும் ஒரு முறை பாத வெடிப்புகளில் தடவி வந்தால், பாத வெடிப்புகள் குணமாகும் என்று கூறுகிறார். இரத்த நெல்லிப் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை சரிசெய்ய உதவுகின்றன.
இந்த எளிய வீட்டு வைத்தியம் பாத வெடிப்புகளால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு பயனுள்ள தீர்வாக இருக்கலாம். தினமும் ஒரு முறை இந்தப் பழத்தை நசுக்கி பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும் என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார்.
அதுமட்டுமின்றி பாதங்களை சுத்தமாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருப்பதும், பொருத்தமான காலணிகளை அணிவதும் பாத வெடிப்புகளைத் தடுக்க உதவும். பாதங்களை சுத்தமாக வைத்திருங்கள்: தினமும் மிதமான வெந்நீரில் சிறிது நேரம் பாதங்களை ஊறவைத்து, மென்மையான பிரஷ் கொண்டு சுத்தம் செய்யலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் சருமம் வறண்டு போவதைத் தடுக்கலாம். இது பாத வெடிப்புகள் வராமலிருக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.