உடற்பயிற்சி செய்யும்போது உடலில் வெப்பம் அதிகரிக்கும். எனவே, நாம் அணிந்திருக்கும் ஆடை வெப்பத்தை கிரகிக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அதிகப்படியான வியர்வையும் வரும் என்பதால் அதற்கேற்ற ஆடையைத் தேர்வு செய்ய வேண்டும்.
உடற்பயிற்சிக் கூடத்துக்கு செல்வதற்காக எந்த மாதிரியான ஆடைகளை தேர்வு செய்யலாம் என்று கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த உடற்பயிற்சி நிபுணர் சதீஷ்.
இனி அவரது வார்த்தைகளிலிருந்து கேட்போம்…
பெண்களுக்கு tank tops, sports wears, காட்டன் டி-ஷர்ட், track pant அணியலாம். ஆண்களுக்கு காட்டன் டி-ஷர்ட், track pant ஆகியவற்றையும் அணியலாம்.
உடற்பயிற்சி செய்வதற்காகவே தயாரிக்கப்படுகிற பிரத்யேகமான ஆடைகளை தேர்வு செய்வது சிறந்தது.
பாலிஸ்டர், காட்டன் போன்ற உடைகளை தேர்வு செய்தால் சிறப்பு. shorts, yoga pants ஆகியவற்றை தேர்வு செய்யலாம். முடிந்தவரை நல்ல தரமான பிராண்டட் உடைகளை தேர்வு செய்வது நல்லது.
இல்லையென்றால் உடற்பயிற்சி செய்யும் போது pant or shorts கிழிந்துவிட வாய்ப்புள்ளது. ஆடைகளுக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு முக்கியத்துவத்தை ஷூ வாங்குவதிலும் கொடுக்க வேண்டும்.
ஜிம்முக்கும், தினசரி மற்ற வேலைகளுக்கும் ஒரே ஷூவைப் பயன்படுத்தக் கூடாது.
ஜிம்முக்காக பிரத்யேகமாக ஷூ வாங்கிக் கொண்டீர்கள் என்றால் நல்லது. அப்படி வாங்கும் ஷூவையும் விலை மலிவாக வாங்கக் கூடாது.
ஜிம்மில் டிரெட்மில்லை பயன்படுத்தி நாம் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடும்போதும், எடை அதிகமாக தூக்கும்போதும் தரமற்ற ஷூக்களால் நம் கால்களில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தினசரி பயன்பாட்டுக்கு வேண்டுமானால் மலிவான ஷூக்களை வாங்கிப் பயன்படுத்துங்கள். ஜிம்முக்கு முடிந்தவரை பிராண்டட் ஷூக்களை தேர்வு செய்யுங்கள்.
ஷூ சரியாக இல்லையென்றால் மூட்டு வலி, முதுகு வலி, குதிகால் வலி ஆகியவை உண்டாக வாய்ப்பிருக்கிறது.
சிலருக்கு தசை பிடிப்பும் ஏற்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது. ஷூ வாங்குவதற்கு முன்பு சிலவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலாவது ஷூவின் அடிப்பாகம் சற்று பெரியதாக இருக்க வேண்டும். அதாவது கடினத்தன்மை கொண்டதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து அடிபாகத்தில் அடுத்த லேயர் அதாவது இரண்டாவது லேயர் soft -ஆக இருக்க வேண்டும்.
அடுத்து பாதங்களை வைக்கும் பகுதி எடுக்கும் வகையில் இருந்தால் சிறப்பு. ஏனென்றால் அதை நாம் அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ள முடியும்.
இதேபான்று socks தேர்விலும் கவனம் தேவை. breathable and lightweight socks-ஐ தேர்வு செய்யுங்கள். பாதகங்களில் socks அணியும்போது அதிக இறுக்கமாகவும், மிகவும் தொள தொளவெனவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதுதவிர, ஜிம்முக்கு செல்லும்போது ஒரு சிறிய துண்டையும் எடுத்துச் செல்லுங்கள். வியர்வையை அவ்வப்போது துடைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
இனி எலுமிச்சை தோல்களை தூக்கி எறியாதீங்க.. உங்க நேரத்தை மிச்சப்படுத்த இப்படி பயன்படுத்துங்க!
ஜிம்முக்கு சென்று வீடு திரும்பியபிறகு, அதே உடையை மீண்டும் அணிவதையும் தவிர்த்துவிடுங்கள் என்கிறார் சதீஷ்.
உடற்பயிற்சி செய்யும்போதும், ஜிம்முக்குச் செல்லும்போதும் எந்த மாதிரியான ஆடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும் என்ற தெளிவு கிடைத்துவிட்டது அல்லவா!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil